5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 28 October 2024: வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்த தமிழக அரசு.. இன்றைய டாப் 10 செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 28 October 2024: வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்த தமிழக அரசு.. இன்றைய டாப் 10 செய்திகள்..
இன்றைய டாப் 10 செய்திகள்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 28 Oct 2024 20:18 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் வடோதராவில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸுடன், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) வளாகத்தில் டாடா விமான வளாகத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு

  • வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் அதிகப்படியான வெயிலும், வெயில் காலத்தில் மழையும், பனி காலத்தில் உறைப்பனியும் சந்தித்து வருகிறோம். விரிவாக படிக்க
  • ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநில பொதுச் செயலாளர் சரவணன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் அளிக்க வேண்டும் என்றும் அப்படி கூட்டணி ஆட்சி அமைந்தா மகிழ்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக மக்களவை தேர்தல் முடிந்ததும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. விரிவாக படிக்க
  • திருநெல்வேலியில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் திறந்த வெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தால் அபராதம் விதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பேரூராட்சியின் இந்த முடிவு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. விரிவாக படிக்க
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தவிர்த்து சனி, ஞாயிறு வார விடுமுறை வருகிறது. விரிவாக படிக்க
  • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்றைய தினம் தமிழக அரசியலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய அந்த மாநாடு தொடர்பான பேச்சு இந்திய அளவில் இருந்தது. விரிவாக படிக்க
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விரிவாக படிக்க

இந்தியா

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூரில் உள்ள பட்டால் பகுதியில் ராணுவ வாகனம் மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரியவந்துள்ளது. ராணுவ ஆம்புலன்சை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். விரிவாக படிக்க
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் வடோதராவில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸுடன், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) வளாகத்தில் டாடா விமான வளாகத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா – ஸ்பெயின் இடையேயான உறவுகளுக்கு புதிய திசையை ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்தார். விரிவாக படிக்க
  • கேரளாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் நகைகள் திருடியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் முபினா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக இந்த திருட்டில் ஈடுபட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக படிக்க

வைரல்

  • ஆரோக்கியமான உடல்நலம் இருந்தாலும் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி பொருப்பை தட்டி கழிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், இரண்டு கைகளும் இன்றி சொமேட்டோவில் டெலிவரி ஊழியராக பணியாற்றும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் அவரது தன்னம்பிக்கையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். விரிவாக படிக்க

விளையாட்டு

  • பாகிஸ்தான் அணியில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டன் இன்று பதவி விலகிய நிலையில், ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News