Evening Digest 28 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன? - Tamil News | evening digest 28th september 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 28 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

Published: 

28 Sep 2024 18:49 PM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 28 September 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள்

Follow Us On

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய பெங்களூரு மக்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு:

  • தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 470 ஏக்கர் பரப்பளவில் ஆலையை அமைக்கும் டாடா நிறுவனம், ஜாகுவார், லேண்ட் ரோவர்களின் மின்சார கார்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. விரிவாக படிக்க
  • உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. விரிவாக படிக்க
  • வரும் 9 ஆம் தேதி மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • ஆண்டிபட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயங்களுடன் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரிவாக படிக்க

Also Read: சென்னையில் ரூ.6 லட்சத்திலே வீடு.. ஈஸியா வாங்கலாம்? மிஸ் பண்ணாதீங்க.. தமிழக அரசு அசத்தல் ஏற்பாடு!

இந்தியா:

  • தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய பெங்களூரு மக்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழல் நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் (UTs) குரங்கு அம்மை என அழைக்கப்படும் Mpox ஐ தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் நோய் பரவுவதைக் குறைக்க பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. விரிவாக படிக்க
  • பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
  • சித்தராமையா மீதான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலகம்:

  • நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
  • இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணம் அடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் நஸரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க
  • இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும் என்று ஐ.நாவில் இந்திய தூதரக அதிகாரி பவிகா மங்காளனந்தன் தெரிவித்துள்ளார்.

Also Read: அம்மா செண்டிமெண்ட் பைக்.. மனமுருகி பேனர் வைத்த மகன்..

விளையாட்டு:

  • இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானின் இளைய சகோதரர் முஷீர் கான் சாலை விபத்தில் காயமடைந்துள்ளார். இந்த விபத்தில் முஷீர் கானின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முஷீர் கான் தனது தந்தை நௌஷாத் கானுடன் அசம்கரில் இருந்து லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​இந்த விபத்து ஏற்பட்டது. விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version