5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 29 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

Top Headlines | உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 29 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 29 Sep 2024 20:08 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக 3 அமைச்சர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அமைச்சர்கள் கண்காணித்து வந்த துறைகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை ஊழியர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு :

தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல் நேற்று மாலை வெளியானது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய நிலையில் அதனை ஏற்று ஆளுநர் அலுவலகம், அதிகாரப்பூர்வ அமைச்சரவை மாற்றத்தை வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க

தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக 3 அமைச்சர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அமைச்சர்கள் கண்காணித்து வந்த துறைகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சார துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க 

தமிழகத்தில் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க 

சென்னை அசோக் நகரில் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த அந்த நபர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : Aloe Vera Skin Care: சருமத்திற்கு சஞ்சீவியாக செயல்படும் கற்றாழை.. முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!

முதல்வரின் மகன் என்ற ஒரு காரணத்தை விட, துணை முதலமைச்சராக இருப்பதற்கு உதயநிதிக்கு வேறு ஏதேனும் தகுதி உள்ளதா என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜாமீன் அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி நேர்மையான அரசை கொடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன் என்று துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு வாழ்த்து கூறியவர்கள், என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி, விமர்சிப்பவர்களுக்கு நான் எனது பணியின் மூலம் பதிலளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் உயிரையும் தங்கள் உயிரையும் காப்பாற்றவே போலீசார் என்கவுன்ட்டர் செய்கின்றனர். என்கவுன்ட்டர் மூலம் கொள்ளையர்களுக்கு பயம் ஏற்படும், இனி அவர்கள் தமிழகத்திற்குள் வரவே யோசிப்பார்கள் என்று முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இந்தியா :

பெங்களூருவில் உள்ள கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை ஊழியர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலையும், கோயில் பொருட்களையும் பாதுகாக்க வேண்டிய ஊழியர்களே இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக படிக்க 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே கைதான 17 மீனவர்களையும் காங்சேந்துறை கடற்படை முகாமில் இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு அதன் கர்மாவே காரணம் என்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Breast Cancer: மார்பக புற்றுநோய் பற்றிய பயமா..? வீட்டிலேயே இப்படி பரிசோதனை செய்து பாருங்க!

உலகம் :

இன்று முதல் பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த இலையுதிர் காலத்தில், பூமி இரண்டாவது சந்திரனைப் பெற உள்ளது – 2024 PT5 என்று பெயரிடப்பட்ட ஒரு சிறிய சிறுகோள் – இது செப்டம்பர் 29 மற்றும் நவம்பர் 25 க்கு இடையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்கும் முன் கிரகத்தைச் சுற்றி வரும்.  விரிவாக படிக்க 

உடல்நல குறைவு காரணமாக விடுப்பு கேட்ட பெண் ஊழியர், மேனேஜர் விடுப்பு அளிக்காததால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர், பணி சுமை காரணமாக உயிரிழந்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது உடல்நல குறைவு ஏற்பட்ட போதும் விடுப்பு தராத நிலையில் பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக படிக்க 

வணிகம்  :

அக்டோபர் மாதம் தொடங்க இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு, கிரெடி கார்டு, அகவிலைப்படி உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக படிக்க 

இதையும் படிங்க : Food Recipes: தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? சூப்பர் ரெசிபி இதோ!

விளையாட்டு :

ஐபிஎல் 2025 அடுத்த சீசன் மெகா ஏலம் தொடர்பான முக்கிய விதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நேற்று (செப்டம்பர் 28ம் தேதி) சனிக்கிழமையன்று நடந்த ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ இந்த விதிகளை அறிவித்தது. விரிவாக படிக்க 

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான டி20 தொடர் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி குவாலியரில் நடக்கிறது. இந்தநிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  விரிவாக படிக்க 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி காலேயில் நடைபெற்றது. இந்த போட்டியில், போட்டியை நடத்தும் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விரிவாக படிக்க 

சினிமா :

ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துவரும் ‘லப்பர் பந்து’ படத்தை பாராட்டி கிரிக்கெட்டர் தினேஷ் சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. விரிவாக படிக்க 

கார் பந்தய அணியை நடிகர் அஜித் தொடங்கியது குறித்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. விரிவாக படிக்க 

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது இளைய மகனுக்கு ‘ஆப்ராம்’ என்று பெயர் வைத்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார். விரிவாக படிக்க 

கார்த்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க 

நடிகர் விஜயின் ‘கோட்’ படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. விரிவாக படிக்க 

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்திலிருந்து வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க 

இதையும் படிங்க : Tamilnadu Cabinet Reshuffle: இளைஞரணி செயலாளர் டூ துணை முதலமைச்சர்.. அமைச்சர் உதயநிதியின் அரசியல் பயணம்..

வைரல் :

பெங்களூருவில் உள்ள கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை ஊழியர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலையும், கோயில் பொருட்களையும் பாதுகாக்க வேண்டிய ஊழியர்களே இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக படிக்க u

Latest News