Evening Digest 02 November 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன? - Tamil News | evening digest 2nd november 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 02 November 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 02 November 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள்

Updated On: 

02 Nov 2024 19:52 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு

  • சென்னையில் வீட்டு வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கொலை செய்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். விரிவாக படிக்க
  • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், வரும் 2026  தேர்தலில் அதிமுக மற்றும் த.வெ.க இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.  விரிவாக படிக்க
  • அண்ணன், தம்பி உறவு வேறு. கொள்கை வேறு. தாய் தந்தையராகவே இருந்தாலும் எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிரி எதிரி தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விரிவாக படிக்க
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : உடல் முழுக்க சூடு.. 16 வயது சிறுமி சித்ரவதை செய்து கொன்ற தம்பதி.. சென்னையில் ஷாக்!

இந்தியா

  • கேரளா மாநிலம் பாலக்காடு அருகே விரைவு ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரயில்வே தண்டவாளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விரிவாக படிக்க 
  • ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
  • சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அமித் ஷா மீது குற்றச்சாட்டப்பட்ட நிலையில், கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை முதல் 8ஆம் தேதி வரை மூன்று நாள் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

உலகம்

  • பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக் தலைமையில் படுதோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி, புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரிட்டனில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கருப்பிண பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள போட்ஸ்வானா நாட்டில் 58 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. போட்ஸ்வானா நாட்டின் புதிய அதிபராக டுமா பொகோ பதவியேற்றுள்ளார்.
  • இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார்.

Also Read : “விஜய்யை விமர்சிக்காதீங்க” இபிஎஸ் போட்ட ஆர்டர்.. 2026 தேர்தலில் பூகம்பம்தான் போலயே!

விளையாட்டு

  • மும்பையில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இதனால், நியூசிலாந்து அனிக்கு எதிரான இந்திய அணி 28 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. விரிவாக படிக்க
  • இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. விரிவாக படிக்க

 

புரதம் நிறைந்த பழங்கள்.. என்னென்ன தெரியுமா?
சியா விதை தண்ணீரை அதிகம் சாப்பிடுபவர்களா? அப்போ இந்த பக்க விளைவுகள் வரக்கூடும்
மனைவியை ஏன் கொண்டாட வேண்டும் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை மாற்றும் முக்கிய விஷயங்கள்!