Evening Digest 30 October 2024 : தீபாவளியை முன்னிட்டு இன்று இரவு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. இன்றைய டாப் 10 செய்திகள்!
Today Important News | உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று காலை முதல் தற்போது வரை உள்ளூர் முதல் உலகம் வரை நடந்த முக்கிய செய்திகள், இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பேருந்து நிலையங்கள் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் ரூ.115 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால், இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. விரிவாக படிக்க
- கோவை தனியார் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து மாணவன் தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக கருதி 4வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக படிக்க
- நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ள கார் ரேசிங் அணியின் லோகோ உள்ளிட்ட விஷயங்களில் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளதை அத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். விரிவாக படிக்க
- தமிழகத்தில் நாளை (அக்டோபர் 31) திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க
- சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்டோபர் 31) ஆம் தேதி புறநகர் ரயில்கள் இயக்கம் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை சென்னையில் புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விரிவாக படிக்க
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் ஆவின் நிறுவனம் சுமார் ரூ.115 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க
- மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், ரூ.11,9 கோடி மதிப்பில் புதிய திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விரிவாக படிக்க
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இன்று இரவு 3 முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரிவாக படிக்க
- விழுப்புரத்தின் ஆம்னி பேருந்தின் டேங்கில் ஓட்டை விழுந்து சுமார் 400 லிட்டர் டீசல் சாலையில் ஆறாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா
- பெட்ரோல் பங்க் டீலர்களுக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக படிக்க
- ஹைதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் 33 வயதான ரேஷ்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
- ஹரியானா மாநிலம் குருகிராமில் முன்னெச்சரிக்கை மற்றும் அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் சாலையில் போடப்பட்ட வேகத்தடையின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விரிவாக படிக்க
- டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதில் சிக்கல் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டிய நிலையில், டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதற்கு பதில் அளித்துள்ளார். விரிவாக படிக்க
உலகம்
- காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஷேக் நைம் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலக அளவில் சுமார் 110 கோடி மக்கள் மிக கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளானர் என்றும், இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி அதிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சினிமா
- மலையாள திரைப்படத்தின் தொகுப்பாளர் நிஷாத் யூசுப் இன்று காலமானார். கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். விரிவாக படிக்க
- சிறுத்தை சிவா இயக்கத்தில், சூரியா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் இருந்து “தலைவனே” என்ற லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க
- சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம், ப்ரீ புக்கிங்கில் சுமார் 6.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக படிக்க
- பிக்பாஸ் வீட்டில் 24-வது நாளான இன்று வெளியான ப்ரோமோ வீடியோவை பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 9 போட்டியாளர்கள் இந்த வாரநாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். விரிவாக படிக்க
ஆன்மீகம்
- தீபாவளி கொண்டாட்டம் இந்தியாவில் களைகட்ட தொடங்கிவிட்டது. மக்கள் ஒரு புறம் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி வருகிறார்கள். இந்த தீபாவளி நாளில் எக்காரணத்தை கொண்டும் சில பொருள்களை தானமாகவோ அன்பளிப்பாகவோ கொடுக்க கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. விரிவாக படிக்க
- ஜோதிடத்தில் நம்பிக்கைக் கொண்ட பலருக்கும் கிரகப்பலன்கள் சாதகமாகவும், பாதகமாகவும் அமையும். அவ்வப்போது நிகழும் கிரக மாற்றம் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் சுக்கிரனும், சூரியனும் ராசி மாறுவதால் சனிஸ்வரன் தோஷம் நீங்கும் நிலை உண்டாகிறது. விரிவாக படிக்க
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.