Evening Digest 31 October 2024 : உள்ளூர் முதல் உலகம் வரை.. இன்றைய நாளுக்கான டாப் 10 செய்திகள்! - Tamil News | evening digest 31st October 2024 top news headlines in tamil | TV9 Tamil

Evening Digest 31 October 2024 : உள்ளூர் முதல் உலகம் வரை.. இன்றைய நாளுக்கான டாப் 10 செய்திகள்!

Today Important News | உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 31 October 2024 : உள்ளூர் முதல் உலகம் வரை.. இன்றைய நாளுக்கான டாப் 10 செய்திகள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

31 Oct 2024 20:04 PM

இன்று (அக்டோபர் 31) காலை முதல் தற்போது வரை உள்ளூர் முதல் உலகம் வரை நடந்த முக்கிய செய்திகள்,  இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சென்னையில் இருந்து போடி சென்ற ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

  • சென்னையில் இருந்து போடி சென்ற ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் சக்கரம் கீழே இறங்கியதால் விபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் வேறு ரயில் மூலம் பாதுகாப்பான அனுப்பிவைக்கப்பட்டனர். விரிவாக படிக்க
  • தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களை நேரில் சந்தித்த நிலையில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். விரிவாக படிக்க 
  • தமிழகத்தில் இன்று காலை முதலே பலவேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விரிவாக படிக்க 
  • இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் ஏரளமான மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்தனர்.
  • கும்பகோணத்தில் மது போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • திமுக என்ற நரகாசுரனை வரும் 2026 ஆம் ஆண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டு சிறந்த தீபாவளியை கொண்டாடுவோம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்த பொதுமக்களில் சுமார் 82 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
  • ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா

  • தெலங்கானாவில் மோமோஸ் சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து, மாநில முழுவதும் மயோனைஸ் பயன்படுத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க 
  • ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான பெண், இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில், இன்று ஜோத்பூரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விரிவாக படிக்க 
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி துட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க 
  • நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியா – சீனா எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர். விரிவாக படிக்க 
  • ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் மூட்டையில் வைத்து பட்டாசு வைத்து எசுத்துச் சென்ற நிலையில், திடீரென பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொழுதுபோக்கு

  • பிக்பாஸ் வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாகவும், படத்தின் புரொமோஷனுக்காவும் நடிகர் கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். விரிவாக படிக்க 
  • நடிகர் கவினின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ளடி பெக்கர்’ படத்திலிருந்து 2-வது ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க 
  • சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தயாராகி திரையரங்குகளில் வெளியாகி உள்ல அமரன் திரைப்படத்தில் இருந்து “உயிரே” பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது. விரிவாக படிக்க 
  • நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படக்குழு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய போஸ்டருடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க 
  • ஆகாஷ் முரளி நடிக்கும் நேசிப்பாய படத்திலிருந்து வீடியோ பாடலைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க 

வணிகம்

  • அக்டோபர் 31ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 உயர்ந்து ரூ.7,455க்கு விற்பனையாகிறது. விரிவாக படிக்க 
  • கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. விரிவாக படிக்க 

விளையாட்டு

  • இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 600 இன்னிங்ஸ் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார். விரிவாக படிக்க 
  • சரியாக 19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விரிவாக படிக்க 
  • வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று அசத்தியது. விரிவாக படிக்க
  • ஐபிஎல் 2025 சீசனில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது ஆபத்தில் முடியலாம்
குறைந்த நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!
1 ஆண்டுக்கான FD - தனியார் வங்கிகளின் வட்டி விகிதங்கள்!
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதில் இவ்வளவு ஆபத்துக்கள் உள்ளதா?