Evening Digest 04 November 2024: விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி..இன்றைய டாப் 10 செய்திகள்! - Tamil News | evening digest 4th November 2024 top news and important happenings in Tamil news | TV9 Tamil

Evening Digest 04 November 2024: விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி..இன்றைய டாப் 10 செய்திகள்!

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 04 November 2024: விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி..இன்றைய டாப் 10 செய்திகள்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

04 Nov 2024 20:28 PM

இன்றைய முக்கிய நிகழ்வுகள்: நவம்பர் 4 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம். விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின், விரைவில் தொடங்கப்படும் முதல்வர் மருந்தகம், நாளை அமெரிக்க அதிபர் தேர்தல், கிரிக்கெட்டில் இருந்து விருத்திமான் சஹா ஓய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு

  • தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூர் மக்கள் சென்னை கோயம்புத்தூர் பெங்களூரு போன்ற தொழில் நகரங்களுக்கு இன்று திரும்பியதால் தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலால் திண்டாடியது. சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் அனைவரும் கடும் அவதி அடைந்தனர். இதனிடையே சென்னை கிளாம்பாக்கத்தில் வந்திரங்கிய பயணிகள் வசதிக்காக கூடுதலாக மின்சார ரயில்களும் பேருந்துகளும் இயக்கப்பட்டன. விரிவாக படிக்க
  • தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான முதல் கனமழை வரை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விரிவாக படிக்க
  • திமுக வளர்வது பலருக்கும் பிடிக்கவில்லை. புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என நினைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெயர் குறிப்பிடாமல் அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக இணையவாசிகள் பலரும் தெரிவித்துள்ளனர். திமுக அரசியல் ரீதியாக எதிரி என தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் விஜய் தெரிவித்திருந்தார். விரிவாக படிக்க
  • தெலுங்கு மக்கள் குறித்து தான் பேசிய கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து எழுந்து வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கஸ்தூரி பேசிய கருத்துக்கள் கடும் சர்ச்சையானது. ஆனால் வேண்டுமென்றே தனது கருத்தை திரித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருவதாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். விரிவாக படிக்க
  • முதலமைச்சர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தபடி 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முதல்வர் மருந்தகம் ஆயிரம் இடங்களில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மருந்தகங்கள் அமைக்க தகுதிகள் கொண்டவர்கள் அதற்கென அறிவிக்கப்பட்டுள்ள https://www.mudhalvarmarundhagam.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க

இந்தியா

  • பண்டிகைகள் வருவதால் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளாவில் உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய மற்றும் மாநில கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு ஐந்து லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்யும் நிலையில் வரும் நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. எதற்காக ஆன்லைன் முன்பதிவு ஸ்பாட் புக்கிங் ஆகியவை பின்பற்றப்படுகிறது. விரிவாக படிக்க
  • பணவீக்கம் காரணமாக டீ, பிஸ்கட் விலை உயரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் எண்ணெய், ஷாம்பு போன்ற அன்றாட பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விரிவாக படிக்க
  • உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே மிக் 29 ரக போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் விழுந்த நொறுங்குவதற்கு முன் பாராசூட் மூலம் விமானிகள் கீழே குறித்து உயிர்த்தப்பியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
  • ஆந்திர மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி இருக்கும் என துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவது கவலை அளிப்பதாகவும், தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் உள்துறை அமைச்சர் பதவி நான் ஏற்பேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உலகம்

  • இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் காற்று மாசுபாட்டை தொடர்ந்து ஒரு வாரம் அரசு பள்ளிகளுக்கு பாகிஸ்தான் அரசு விடுமுறை அளித்துள்ளது. மேலும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்து ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.விரிவாக படிக்க
  • அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றியடைய தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விரிவாக படிக்க

விளையாட்டு

  • ஆஸ்திரேலியாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பாகிஸ்தான் எதிராக அதிக கட்சிகள் பெற்ற அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
  • தோனியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்காக காத்திருப்பதாக முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஸ்டைல் பெயின் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிலர் விளையாடியுள்ள நிலையில் அவர்களிடம் தோனியின் செயல்பாடு குறித்து கேட்டு தெரிந்து கொள்ளவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
  • அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்தியனைக்காக 40 டெஸ்ட் மட்டும் 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்
இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!