5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 04 October 2024: ஒரே நாளில் இத்தனை நிகழ்வுகளா?- இன்றைய டாப் 10 செய்திகள்!

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மட்டுமல்லாமல், வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை வழங்குகிறோம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 04 October 2024: ஒரே நாளில் இத்தனை நிகழ்வுகளா?-  இன்றைய டாப் 10 செய்திகள்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 04 Oct 2024 20:36 PM

இன்றைய முக்கிய நிகழ்வுகள்: அக்டோபர் 4 ஆம் தேதியான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம். இதில் உள்ளூர் முதல் உலகம் வரை நடந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு

  • நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் வைபவம் இன்று நடைபெற்றது. அதே சமயம் சினிமாவில் விஜய் நடிக்கும் கடைசி படமான 69 ஆவது படத்திற்கான பூஜையும் இன்று இனிதே நடைபெற்றது. விரிவாக படிக்க
  • சனாதான தர்மத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்துள்ளார். திருப்பதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இந்த கருத்துக்களை அப்பகுதியில் தமிழ் மக்கள் இருப்பதால் தமிழிலேயே சொல்வதாக கூறினார். இதனை தொடர்ந்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அநேக இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற தேமுதிக கட்சியின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓகே சொன்னால் எந்த ஈகோவும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு நிழலாகவும், கூட்டணிக்காகவும் உழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.விரிவாக படிக்க
  • தனது கட்சி தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடிதம் ஒன்றை முதல் முறையாக எழுதியுள்ளார். அதில் விக்கிரவாண்டியில் நடைபெறும் கட்சியின் முதல் மாநில மாநாடு அமைதியான முறையிலும், பக்குவம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் போது தான் நம் மீது  கேள்விகளை வீசுவதில் அதிக விருப்பம் கொண்டவர்களுக்கு பதில் சொல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தெரிவித்த ஒரு கருத்துக்கு பாஜக பிரமுகர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் தன்னுடைய கட்சியை பற்றி உயர்வாக சொல்லட்டும். ஆனால் அதற்காக மற்ற கட்சிகளை சாதாரண கட்சிகள் என சொல்வது எந்த வகை நியாயம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விரிவாக படிக்க

Also Read: Pepper Benefits: எடை குறைப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. சிறந்த பலனை தரும் மிளகு..!

இந்தியா

  • மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் கணவர் ஈடுபடுவது குற்றமல்ல என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் விருப்பமின்றி கணவர் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமாக அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண வன்கொடுமைகளை குற்றமாக்குவது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனிடையே காலையில் தங்க கொடிமரத்தில் உள்ள வளையம் உடைந்து விழுந்ததாக தகவல் பரவி பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் கொடி மரத்தில் சேதம் ஏற்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. விரிவாக படிக்க
  • உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வயதானவர்களை இளமையானவர்களாக மாற்றவதாக கூறி ரூ.35 கோடி மோசடி செய்த தம்பதியினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிஷின் மூலம் முதுமையானவர்களை இளமையானவர்களாக மாற்றலாம் என விளம்பரம் செய்து இந்த மோசடி அரங்கேறியுள்ளது. விரிவாக படிக்க
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில நக்சலைட்டுகளுக்கும்,  போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விரிவாக படிக்க

Also Read: Tirupati: திருப்பதியில் தங்க கொடிமரம் சேதமா? – உண்மை என்ன தெரியுமா?

உலகம்

  • ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் ஈரான் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி உரையாற்றினார். அப்போது ஈரானின் எதிரி பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் எதிரி என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் கடமையை நிறைவேற்றுவதில் தாமதிக்கவோ அவசரப்படவோ இல்லை.நாங்கள் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக எடுக்கும் முடிவுகள் சரியான நேரத்தில் நிகழ்த்தப்படும் எனவும் கூறியுள்ளார். விரிவாக படிக்க
  • லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் லெபனானுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

  • ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. இப்போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் நடைபெறும் இதுவரை ஐந்து மகளிர் டி20 போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க
  • இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் ரிஷப் பண்ட் இன்று தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விரிவாக படிக்க

 

Latest News