Evening Digest 05 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன? - Tamil News | evening digest 5th october 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 05 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

Published: 

05 Oct 2024 20:02 PM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 05 October 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள்

Follow Us On

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். நாகப்பட்டினம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு:

  • ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க
  • 92 வது இந்திய விமானப்படையின் ஆண்டு விழாவை ஒட்டி வரும் 6ஆம் தேதி நாளை விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது. நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். விரிவாக படிக்க
  • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
  • நாகப்பட்டினம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது கார் கோயில் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் ஓ.எஸ் மணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரிவாக படிக்க 
  • வரும் 11ஆம் தேதி ஆயுத பூஜை, 12ஆம் தேதி விஜயதசமி, 13ஆம் தேதி ஞாயிற்றுகிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில் நிலையங்களில் கூடடம் நிரம்பி வழியும். இந்த நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, திருச்சி மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  விரிவாக படிக்க

Also Read: ரூ.4 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வருதா? இனி இப்படிதான் கட்டணும்.. மின்வாரியம் அதிரடி!

இந்தியா:

  • மேற்கு வங்க மாநிலத்தில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உள்ளூர் மக்களே பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக படிக்க
  • தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண வீட்டாரை ஏற்று சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம்:

  • ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் குறிவைக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், முதலில் அணுசக்தி நிலையங்களை தாக்க வேண்டும் என்றும் அதற்கு பிறகு என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்றும் இஸ்ரேலுக்கு அவர் உத்தரவிட்டார். விரிவாக படிக்க 
  • லெபானனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் உயிரழந்துள்ளார். இதனால் அங்கு மேலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Also Read: ஆயுதபூஜை விடுமுறை நாட்கள்.. அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

விளையாட்டு:

  • மும்பை அணி 15வது முறையாக இரானி கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. லக்னோ உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்தது. விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
Exit mobile version