Evening Digest 06 November 2024: மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்.. இன்றைய டாப் 10 செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள்: நவம்பர் 6ஆம் தேதி புதன்கிழமையான இன்று காலை முதல் தற்போது வரை பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாடு
- 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கி விட்டன. அந்த வகையில் திமுகவும் களப்பணியை தொடங்கி விட்டது. விரிவாக படிக்க
- திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ் கடவுளாக அனைவராலும் கொண்டாடப்படும் முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. விரிவாக படிக்க
- புதுச்சேரியில் உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடுக்கிட வைக்கும் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை காணலாம். விரிவாக படிக்க
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேன் ஓட்டுநர்கள் இருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். விரிவாக படிக்க
- வளசரவாக்கம் பகுதியில் பெண்களை கொத்தடிமைகளாக வைத்திருந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதில் 1 சிறுமி உட்பட 3 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர், ராமாபுரம், மதுரவாயல் வட்டம், சென்னை என்பவர் 04.11.2024 அன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரில், வளசரவாக்கம் பகுதி திருப்பதி நகர் 2வது குறுக்கு தெருவிலுள்ள ஒரு வீட்டில் சிறுமி மற்றும் பெண்களை கொத்தடிமைகளாக நடத்தி கொடுமைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. விரிவாக படிக்க
- மதுரையில் மதுபோதையில் மகன் மீது கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் அருகே உள்ள பெரியார் நகர் தெருவவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 62) . இவருக்கு ராமன் (வயது 30), லட்சுமணன் (வயது 28) என இரு மகன்கள் உள்ளனர். விரிவாக படிக்க
இந்தியா
- இந்தியாவில் ஆன்லைன் மோசடிகளும், சைபர் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த சிக்கல்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மோசடிக்காரர்கள் மக்களை எளிதாக ஏமாற்றி விடுகின்றனர். விரிவாக படிக்க
- அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் டொனால்ட் டிரம்புடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
- இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நாளில் ரூ.9,000 கோடி, ரூ.7,000 கோடி என முதலீட்டாளர்கள் கடும் நஷடத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய (நவம்பர் 5) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய நிலையில், இன்று (நவம்பர் 6) பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. விரிவாக படிக்க
உலகம்
- உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்கவுள்ளார். அமெரிக்காவில் மொத்தமுள்ள 538 இடங்களில் டிரம்பின் குடியரசுக் கட்சி 277 இடங்களைப் பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவை. விரிவாக படிக்க
- அமெரிக்காவின் 47 வது அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் டிரம்பிற்கு எதிராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில். முடிவுகள் மாற்றாக அமைந்துள்ளது. விரிவாக படிக்க
- ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பல்கலைக்கழக மாணவி ஒருவர் உடைகளை களைந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் அரை நிர்வாண கோலத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி, பேசுபொருளாக மாறியுள்ளது. விரிவாக படிக்க
விளையாட்டு
- உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும் ஒருவர். ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, கடந்த சில போட்டிகளாகவே ரன் அடிக்க திணறி வருகிறார். வங்கதேசத்திற்கு எதிரான ஒரு இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. விரிவாக படிக்க
- இந்தியன் பிரீமியர் லீக் 18வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்திற்கான தேதியை நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகின்ற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க