Evening Digest 06 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன? - Tamil News | evening digest 6th october 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 06 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

Updated On: 

06 Oct 2024 20:01 PM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 06 October 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் (picture credit: PTI)

Follow Us On

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் இன்று பிரம்மாண்டமாக விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பலரும் கண்டு களித்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 22 மாநிலங்களில் பிரதமர் மோடி இலவச மின்சாரம் வழங்கினால் அவருக்கு ஆதரவாக டெல்லி தேர்தலில் பிரச்சாரம் செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு:

  • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. விரிவாக படிக்க
  • சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு பிரம்மாண்டமாக விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடந்த நிலையில், 21 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் இன்று நடைபெற்றது. விரிவாக படிக்க
  • சென்னை மெரினாவில் விமான சாசக நிகழ்ச்சிக்கு சென்ற 20க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. விரிவாக படிக்க
  • தெற்கு ஆந்திரா – வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க

Also Read: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா தெரியுமா?

இந்தியா:

  • டெல்லியில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்கிறது. பிப்ரவரியில் டெல்லியில் தேர்தல் நடப்பதற்கு முன் பாஜக ஆளும் 22 மாநிலங்களில் பிரதமர் மோடி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதை அவர் செய்தால் நான் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். விரிவாக படிக்க
  • குஜராத்தில் உள்ள தொழில்சாலையில் இருந்து ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப்பொருளை டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
  • மும்பையில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதவாது, மண்டல, மகர விளக்கு பூஜையின்போது ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க

உலகம்:

  • மத்திய காசா பகுதியில் மசூதியை குறிவைத்து இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாகவும் மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
  • இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலுக்கு ஈரானிய பினாமி அமைப்புகள் தயாராகி வருவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI எச்சரிக்கை விடுத்துள்ளது. விரிவாக படிக்க

Also Read: ரெடியா மக்களே.. தொடங்கப்போகுது வடகிழக்கு பருவமழை.. எப்போது தெரியுமா? வானிலை மையம் அறிவிப்பு!

விளையாட்டு:

  • 2024 மகளிர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2024 டி20 மகளிர் உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த பிரச்சனை இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாதாம்..
தினமும் வெல்லம் கலந்த பால் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
Exit mobile version