5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 07 November 2024: விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்.. இன்றைய டாப் 10 செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 07 November 2024: விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்.. இன்றைய டாப் 10 செய்திகள்..
இன்றைய டாப் 10 செய்திகள்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 07 Nov 2024 20:56 PM

இன்றைய முக்கிய நிகழ்வுகள்: நவம்பர் 7ஆம் தேதி புதன்கிழமையான இன்று காலை முதல் தற்போது வரை பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழ்நாடு

  • தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சுவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. விரிவாக படிக்க
  • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுவதால், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி திருச்சி சூர்யா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விரிவாக படிக்க
  • தஞ்சையில் இன்று பூதலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு இல்ல திருமண விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்பார் என்றும் 7வது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என்ற சாதனை படைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  விரிவாக படிக்க
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது. அங்கிருந்த காவலாளியும் கொல்லப்பட்டார். விரிவாக படிக்க

இந்தியா

  • டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியதை அடுத்து, சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று விவசாயிகளின் பயிர்க்கழிவுகள் அல்லது மரக்கழிவுகள் எரிக்கும் அபராதத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது. விரிவாக படிக்க
  • சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 2வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கொண்டு வரக் கோரிய தீர்மானத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை சட்டப்பேரவை கூடிய நிலையில், அவாமி இத்திஹாத் கட்சி எம்.எல்.ஏ குர்ஷித் அகமது கேஷ் பதாகை ஒன்று உயர்த்தி காண்பித்தார். விரிவாக படிக்க
  • தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பின் பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. விரிவாக படிக்க

உலகம்

  • அமெரிக்காவில் கடந்த நபம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. ஜோ பைடன் தலைமையிலான அரசின் பதவி காலம் முடிவடைய இருந்த நிலையில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.  விரிவாக படிக்க
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்ந்து நடந்து முடிந்துள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபராக உள்ளார். விரிவாக படிக்க
  • உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பிட்ட போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்க தொடங்கியதில் இருந்தே டிரம்ப் முன்னிலை பெற்று வந்தார். விரிவாக படிக்க

விளையாட்டு

  • சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-0 என தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோசமாக செயல்பட்டது.  விரிவாக படிக்க
  • இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இதன்மூலம், தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என முன்னிலை பெற்று தொடரையும் வென்றது. இப்போட்டியின் நடுவே, வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் இன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் விரிவாக படிக்க
  • இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன் இந்திய ஏ அணி, ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக இரண்டு நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி தோல்வியை சந்தித்தது. விரிவாக படிக்க

Latest News