Exclusive: இன்னும் 26 நாட்கள் இருக்கு.. புது புயலுக்கு வாய்ப்பிருக்கா? வெதர்மேன் பிரத்யேக பேட்டி!

Tamilnadu Weatherman Pradeep John: வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிக மழை பொழிவை கொடுத்துள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுகுறித்து டிவி9 தமிழுக்கு அவர் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

Exclusive: இன்னும் 26 நாட்கள் இருக்கு.. புது புயலுக்கு வாய்ப்பிருக்கா? வெதர்மேன் பிரத்யேக பேட்டி!

வெதர்மேன் பிரதீப் ஜான்

Updated On: 

04 Dec 2024 15:10 PM

இந்தியாவில் அதிக அளவு மழை பெய்யும் காலங்கள் என்றால் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவங்கள் தான். தென் மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்த அளவு மழையை மட்டுமே கொடுக்கும். மேற்கு தொடர்ச்சி மலையொட்டி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். அதேபோல வடகிழக்கு பருவமழை தான் தமிழகத்திற்கு அதிக மழை பொழிவைத் தருவது. இந்த வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். வடகிழக்கு பருவமழை 60 சதவீதம் வரை தமிழகத்தில் தான் அதிகமாக பெய்யும்.

தமிழ்நாடு மழை பொழிவு

குறிப்பாக, தென் தமிழகம், வட தமிழகம் மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை கொடுக்கும். அதன்படி, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் வரை நீடித்தது. தென்மேற்கு பருவமழை இயல்பாக 137 மி.மீ பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டில் 230 மி.மீ மழை பதிவானது.

இது இயல்பை ட 40 சதவீதம் அதிகமாகும். அதேபோல, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக 14ஆம் தேதியே பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஒருவாரம் மட்டும் இந்த மழை பொழிவு இருந்தது. அதன்பிறகு பெரும்பாலான மாவட்டங்களில் பற்றாக்குறை மழையே நிலவியது. மேலும், அவ்வப்போது விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது.

அதன்பிறகு, கடந்த நவம்பர் 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நவம்பர் 27ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அது ஃபெங்கல் எனும் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பரவலான மற்றும் கடுமையாக மழைப்பொழிவு இருந்தது.

புது புயலுக்கு வாய்ப்பிருக்கா?

குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழையின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்த புயல் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் புதுச்சேரியை புரட்டி எடுத்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 48 செ.மீ மழை பதிவானது. ஏனென்றால், இந்த பெஃங்கல் புயல் விழுப்புரம் மரக்காணம் அருகே கரையை கடந்ததால், மாமல்லபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதிகள் முழுவதும் வெள்ளக்கடாக மாறியது.

இப்படியாக ஒருபக்கம் இருந்தாலும், வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிக மழை பொழிவை கொடுத்துள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுகுறித்து டிவி9 தமிழுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதாவது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை 441 மி.மீ மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வார் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Also Read : கனமழை, வெள்ளம்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வெதர்மேன் பிரத்யேக பேட்டி

அதாவது, வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகம் என்றும் கூறியுள்ளார். இன்னும் வடகிழக்கு பருவமழை முடிவதற்கு 27 நாட்கள் இருக்கும் என்பதால் மழை பொழிவின் அளவு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவரிடம் அடுத்து எதாவது கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அல்லது புயல் உருவாகுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம். இதன் காரணமாக வரும் டிசம்பர் 12,13ஆம் தேதிகளில் மழை பெய்யலாம். அதன்பிறகும், 18, 19ஆம் தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா என்பதை தற்போது கணிக்க முடியாது.

11 அல்லது 12ஆம் தேதி வாக்கில் மழையின் தன்மை குறித்து அதன்பிறகு கணிக்க முடியும்” என்றார் பிரதீப் ஜான். இந்த ஆண்டு தமிழகத்தில் சராசரி மழை பொழிவு இருந்ததா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து சராசரியாக 442 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தற்போது வரை 442 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இன்னும் 27 நாட்கள் உள்ளது.

எனவே, இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடந்த ஆண்டு 454 மி.மீ மழை பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டின் மழைப்பொழிவு தற்போதை பெய்துவிட்டது” என்றார். சமீப ஆண்டுகளில் மிகக் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “எப்போதுமே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடும்.

Also Read : தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள்?

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி மெதுவோக நகர்கிறது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலும் மெதுவாக நகர்ந்ததால் குறிப்பிட்ட இடங்களில் அதிக மழை பொழிவை கொடுத்தது. இந்தாண்டு ஃபெங்கல் புயலும் மிகவும் மெதுவாக நகர்ந்தது. நீண்ட நேரமாக புதுச்சேரி, விழுப்புரத்தில் நிலை கொண்டிருந்தது.

அதன்பிறகு உள்மாவட்டங்களில் மெதுவாக நகர்ந்தது. இதனால் புயல் மெதுவாக நகர்ந்தால் குறிப்பிட்ட சில இடங்களில் அதி கனமழை பெய்கிறது. இது slow moving system என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற slow moving system இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் புயல் மெதுவாக நகர்வதால் அதி கனமழை பெய்கிறது. புயல் எந்த பாதையை நோக்கி செல்கிறதோ அந்த பகுதியில் அதிக மழை பொழிவு இருக்கும். இதுதான் ஓரிரு நாட்களில் அதி கனமழை பெய்வதற்கு காரணம்” என்றார் பிரதீப் ஜான்.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?