5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tiruvallur Train Accident: சரக்கு ரயில் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்.. தடம் புரண்ட பெட்டிகள்.. திருவள்ளூரில் பரபரப்பு!

Bagmati Express: திருவள்ளுரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. மைசூர் தர்பங்கா விரைவு ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் இந்த விபத்து நடந்துள்ளது. இரண்டு ரயில்களும் மோதியதால் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து ஏரிந்துள்ளது. மேலும் சில பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

Tiruvallur Train Accident: சரக்கு ரயில்  மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்.. தடம் புரண்ட பெட்டிகள்.. திருவள்ளூரில் பரபரப்பு!
ரயில் விபத்து
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Oct 2024 22:46 PM

திருவள்ளுரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. மைசூர் தர்பங்கா விரைவு ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் இந்த விபத்து நடந்துள்ளது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி உள்ளது. மைசூருவிலிருந்து தர்பங்காவிற்குச் சென்று கொண்டிருந்த ரயில், கவரப்பேட்டை அருகே நின்றுக் கொண்டிருந்த  சரக்கு ரயில் மீது  மோதியது.  இரண்டு ரயில்களும் மோதியதால் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து ஏரிந்துள்ளது.

சரக்கு ரயில் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்

மேலும் சில பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.  தற்போது வரை பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மேலும், ரயில் பெட்டிகளில் எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரம் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட தகவலின்படி பயணிகள் சிலர் காயம் அடைந்துள்ளனர். உயிர்தேசம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.  கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்தை தொடர்ந்து, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக 044 2535 4151, 044 2435 4995 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்து தொடர்பாக தேவையான உதவிகளை செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ வசதி உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். ஆம்புலன்ஸ்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விபத்து நடந்தது எப்படி?

மைசூர் தர்பங்கா விரைவு ரயிலுக்கு பச்னை சிக்னல் கொடுக்கப்பட்டதால் கவரப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி ரயில் சென்றுள்ளது. இரவு 8.27 மணிக்கு பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதால் ரயில் சென்றது. பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதால் மெயின் லைனில் ரயில் செல்வதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் லூப் லைனில் 75 கி.மீ வேகத்தில் ரயில் நுழைந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதான லைனில் இருந்து லூப் லைனிற்கு பயணிகள் ரயில் சென்றபோது நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியல் 2 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.

Latest News