Electricity Bill: ஜூலையில் மின் கட்டணம் உயர்வா? தமிழக அரசு விளக்கம்! - Tamil News | | TV9 Tamil

Electricity Bill: ஜூலையில் மின் கட்டணம் உயர்வா? தமிழக அரசு விளக்கம்!

Updated On: 

11 Jun 2024 12:37 PM

தமிழகத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின் கட்டணம் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்வதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருப்பதாக ஒரு அட்டவணை படம் பகிரப்பட்டு வருகிறது. மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகப் பரவும் தகவல் வதந்தியே. இது கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Electricity Bill: ஜூலையில் மின் கட்டணம் உயர்வா? தமிழக அரசு விளக்கம்!

மின் கட்டணம்

Follow Us On

மின் கட்டணம் உயர்வா? தமிழகத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதற்கிடையில், வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடைசியாக 2022 செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2023ஆம் ஆண்டு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

Also Read: லஞ்சமாக கொடுக்கப்பட்ட ரூ.500.. 28 வருடங்களுக்கு பிறகு புகார்தாரரிடம் ஒப்படைப்பு.. கோவையில் விநோதம்!

தமிழ்நாடு அரசு விளக்கம்:

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக 2024ஆம் ஆண்டு ஜூலையில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என செய்திகள் பரவி வருகின்றன. இந்த சூழலில், தமிழ்நாடு முழுவதும் மின் கட்டணம் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்வதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருப்பதாக ஒரு அட்டவணை படம் பகிரப்பட்டு வருகிறது. மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகப் பரவும் தகவல் வதந்தியே. இது கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version