Karur: தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல்.. போலீசாருக்கு அடையாளம் காட்டிய டாட்டூ!
Rowdy Murder: காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது. ஆனால் நாய் சடலம் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது.
கரூர் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கிருஷ்ணராயர்புரத்தில் மகாதானபுரம் என்ற பகுதியில் இரட்டை வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்கால் அருகே நேற்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கை மற்றும் கால்கள் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. மதியம் 2 மணியளவில் அந்த பகுதி வழியாக சென்ற மக்கள் அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், லாலாபேட்டை காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read: Paramakudi: பரமக்குடியில் சிறுமியை கடித்த நாய்.. நேரம் அப்படி என சொன்ன பள்ளி நிர்வாகம்!
காட்டிக்கொடுத்த பச்சை
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை சுற்றியுள்ள பொதுமக்களிடம் தலை துண்டிக்கப்பட்ட சடலம் யார் என்பது குறித்து விசாரணை மிகத்தீவிரமாக நடைபெற்றது. இதற்கிடையில் காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது. ஆனால் நாய் சடலம் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது தெரியாமல் போலீசார் குழம்பித் தவித்தனர். ஆனால் இந்த நபரின் இரு கைகளிலும் சிங்கம் உருவம் டாட்டூ குத்தப்பட்டிருந்தது. அதனை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் குழப்பம் தீர்ந்தது. தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் அரவக்குறிச்சி அருகே உள்ள இனங்கனூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் காளிதாஸ் ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. திருட்டு, கொலை, கொள்ளை என பல வழக்குகள் இவர் மீது உள்ளதாகவும், அந்த பகுதியில் இவர் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read: Tiruvannamalai: மகாதீபம் காண திருட்டுத்தனமாக சென்று மாட்டிக்கொண்ட பெண்!
ரவுடிகள் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சிறையில் இருந்த நாட்களில் காளிதாஸிற்கு மகாதானப்புரத்தை சேர்ந்த கைதிகள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அவர்களை அடிக்கடி காண காளிதாஸ் மகாதானபுரம் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் காளிதாஸ் அந்த ஊருக்கு வந்திருக்கலாம் என்றும், அப்போது மது அருந்த போது ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டிருக்கும் எனவும் போலீசார் கணித்துள்ளனர்.இந்த சூழலில் கொல்லப்பட்டவரின் தலையையும் குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காளிதாஸ் அடிக்கடி ராமநாதபுரம் சென்று வருவார்கள் கூறப்படுகிறது. அதனால் அங்கேயும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் பிடிபடும் பட்சத்தில் இந்த கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.