பிரபல யூடியூபர் பிரியாணி மேன் கைது.. சர்ச்சைகளுக்கு மத்தியில் தட்டித்தூக்கிய போலீசார்..
கடந்த சில நாட்களாக யூடியூபில் பிரபலமான உணவுகளைப் பற்றி விமர்சனம் செய்யும் யூடியூபர் இர்ஃபான் மற்றும் டைலரிங் பற்றி வீடியோக்களை வெளியிடும் டைலர் அக்கா, உடற்பயிற்சி குறித்து வீடியோக்களை வெளியிடும் ஜிம் அக்கா என்று அழைக்கப்படும் பிரபல யூட்யூபர்களை குறி வைத்து வீடியோக்களை பிரியாணி மேன் வெளியிட்டதால் சமூக வலைதளத்தில் யூடியுபர்கள் மத்தியில் பெரும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
யூடியுபர் பிரியாணி மேன் கைது: Youtube சேனலை ஆரம்பித்து கன்டென்ட் என்ற பெயரில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைவதும் அதன் மூலம் சம்பாதிப்பதும் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தொலைக்காட்சி சினிமா போன்ற ஊடகங்கள் வழியாக பிரபலமடைய நினைக்கும் இளைஞர்கள் தற்போது சமூக வலைதளம் மூலமாக வீடியோக்களை வெளியிட்டு பலரும் பிரபலம் அடைந்த காரணத்தினால், தாங்களும் அது போன்று குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இறங்குகின்றனர். பொதுமக்கள் தங்கள் youtube சேனலை பார்த்து சப்ஸ்கிரைப் செய்து லைக் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லையை மீறியும், சட்டங்களை மீறியும் பல வீடியோக்களை வெளியிட்டு யூட்யூபில் சர்ச்சையில் சிக்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பிரியாணி மேன் என்று அழைக்கப்படும் அபிஷேக் ரபி தனது youtube சேனலில் அதிக பார்வைகளை பெற வேண்டும் என்பதற்காக பிரபலமாக இருக்கும் யூடியுபர்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைப்ர்களை பெற்றுள்ளார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக யூடியூபில் பிரபலமான உணவுகளைப் பற்றி விமர்சனம் செய்யும் யூடியூபர் இர்ஃபான் மற்றும் டைலரிங் பற்றி வீடியோக்களை வெளியிடும் டைலர் அக்கா, உடற்பயிற்சி குறித்து வீடியோக்களை வெளியிடும் ஜிம் அக்கா என்று அழைக்கப்படும் பிரபல யூட்யூபர்களை குறி வைத்து வீடியோக்களை பிரியாணி மேன் வெளியிட்டதால் சமூக வலைதளத்தில் யூடியுபர்கள் மத்தியில் பெரும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொருவருக்கும் மற்றொருவர் பதிலளிக்கும் வகைகள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதற்கு அவர்களது ஆதரவாளர்களும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவிப்பதால் பெரும் போராட்டக் களமாக சமூக வலைதளம் உள்ளது. குறிப்பாக youtuber இர்ஃபான் கடந்த ஆண்டு விபத்து ஏற்படுத்தி ஒரு பெண் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக பிரியாணி மேன் வீடியோ வெளியிட்டு பெரும் வைரலானது.
இவ்வாறு மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென பிரியாணி மேன் நேரலையில் வந்து தற்கொலை முயற்சி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு அந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாக பரவியது. நேரலையில் பார்த்த பிரியாணி மேனின் நண்பர் ஒருவர், அவரது தாய்க்கு தொடர்பு கொண்டு தற்கொலையை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவும் லைக் ஆகவும் அதிக பார்வைகள் செல்ல வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்பட்ட இருக்கலாம் என்ற அடிப்படையில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் இந்த விவகாரம் சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு சென்றடைந்த நிலையில், youtuber பிரியாணி மேன் இதுபோன்று மற்ற யூடியூபர்களைப் பற்றி வீடியோ வெளியிட்டு சர்ச்சையானது மட்டுமல்லாமல் செம்மொழிப் பூங்காவை பற்றியும் அதில் வரும் ஆண் பெண் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் வீடியோ வெளியிடுவதாக கூறி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
Also Read: வெளியானது 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது?
அந்தப் புகாரின் அடிப்படையில் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாணி மேன் என அழைக்கப்படும் youtuber அபிஷேக் ரபியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் நேரலையில் தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தொடர்பாகவும் மற்ற யூடியூபர்கள் குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாகவும் கிடைக்கப்பெறும் புகார்களை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூபில் அதிக பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகவும் அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு youtuber சிறை சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.