5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Madurai Crime News: பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை.. அதிர்ச்சி காரணம்.. மதுரையில் பயங்கரம்!

மதுரையில் மாவட்டத்தில் பெற்ற குழந்தைகளை தந்தை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தைகளை அவர் கொன்றுவிட்டு தற்கொலை முயன்றார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது தற்கொலை செய்ய முயன்ற அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Madurai Crime News: பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை.. அதிர்ச்சி காரணம்.. மதுரையில் பயங்கரம்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Nov 2024 15:39 PM

மதுரையில் மாவட்டத்தில் பெற்ற குழந்தைகளை தந்தை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தைகளை அவர் கொன்றுவிட்டு தற்கொலை முயன்றார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது தற்கொலை செய்ய முயன்ற அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு வயது 35. இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வர் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை

ஒரு குழந்தை 5 வயதும், மற்றொரு குழந்தைக்கு 7 வயதும் இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில், கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனைவி ராஜேஸ்வரி அவரது உறவினர் வீட்டில் சிறிது நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் அவரது வீட்டிற்கே திரும்பியுள்ளார்.

Also Read: வேற லெவல்.. வங்கி கணக்கிற்கே வரும் ரூ.4,000… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசின் முத்தான திட்டம்!

வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் இவர்கள் இரண்டு பேருக்கு சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனைவியை கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சேதுபதி சேர்த்துவிட்டார். இப்படி சென்று கொண்டிருக்கையில், சம்பவத்தன்று மனைவி ராஜேஸ்வரி வழக்கம் போல் பயிற்சி வகுப்பிற்கு சென்றார்.

வீட்டில் இருந்த சேதுபதி, அறையில் இருந்த இரண்டு குழந்தைகளை இன்று காலையில் கூர்மையான ஆயதத்தால் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இரு குழந்தைகளையும் கத்தியால் குத்தியும், கம்பியால் கழுத்தை நெரித்தும் கொலை செய்துவிட்டு தானும் தனக்கு தானே கழுத்தறுத்துக் கொண்டார்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு:

இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகளுக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சேதுபதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பயிற்சி வகுப்பு முடிந்த வந்த ராஜேஸ்வரி, ரத்த வெள்ளத்தில் மூன்று பேரும் கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 3 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், சேதுபதியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மனைவி ராஜேஸ்வரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளை தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளை கொலை செய்வது தொடர் கதையாகி வருகிறது.

Also Read: த.வெ.க மாநாடு.. விஜய்க்கு 33 கண்டீஷன் போட்ட விழுப்புரம் போலீஸ்.. என்ன நடக்குப்போகுது?

இதில் கொடூரம் என்னவென்றால் குழந்தைகள் கொலை செய்வது தான்..  குடும்ப தகராறு, பணப் பிரச்னை, பெண் குழந்தை பிறந்தது போன்ற காரணங்களால் பெற்ற தாய், தந்தையினரே குழந்தைகளை கொலை செய்வது தொடர் கதையாகி வருகிறது.  அந்த வகையில் தற்போது மதுரையில் குடும்ப தகராறு காரணமாக பெற்ற இரண்டு குழந்தைகள் தந்தை கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

Latest News