”என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்” 3 நாள் தியானம் குறித்து மோடி உருக்கம்!
கன்னியாகுமரியில் 3 நாட்கள் தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த நினைவு பாறை பதிவேட்டில் சில குறிப்புகளை எழுதியுள்ளார். அதில், ”இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவகத்திற்குச் சென்றபோது, தெய்வீக ஆற்றலை உணர்கிறேன். இந்த பாறையில்தான் அன்னை பார்வதியும் சுவாமி விவேகானந்தரும் தியானம் செய்தனர். விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது ஒன்றாகும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
என் வாழ்நாளில் மறக்க முடியாது: கன்னியாகுமரியில் 3 நாட்கள் தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த நினைவு பாறை பதிவேட்டில் சில குறிப்புகளை எழுதியுள்ளார். அதில், ”இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவகத்திற்குச் சென்றபோது, தெய்வீக ஆற்றலை உணர்கிறேன். இந்த பாறையில்தான் அன்னை பார்வதியும் சுவாமி விவேகானந்தரும் தியானம் செய்தனர். விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது ஒன்றாகும். என் வாழ்வின் ஒவ்வொரு கணமும், என் உடலில் ஒவ்வொரு துகளும் தேசத்தின் சேவைக்காக எப்போதும் அர்ப்பணிக்கப்படும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன். ஆன்மீக மறுமலர்ச்சியின் தூண்டுகோலானா சுவாமி விவேகானந்தர் எனது இலட்சியமாகவும், என் ஆற்றலாகவும், என் தவத்தின் ஆதரமாகவும் இருந்துள்ளார். நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் மக்களின் நலனுக்காக விவேகானந்தருக்கு மரியாதையை சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார் பிரதமர் மோடி.
Also Read: தமிழ்நாட்டில் சிக்ஸர் அடித்த இந்தியா கூட்டணி? அதிமுகவை பின்னுக்கு தள்ளியதா பாஜக?
பிரதமர் மோடியின் 3 நாள் தியானம்:
கன்னியாகுமரியில் தியானம் செய்வதறக்க பிரதமர் மோடி கடந்த 30ஆம் தேதி மாலை வந்தடைந்தார். விவேகானந்தர் மண்டபத்தில் இரவு 7 மணிக்கு தியானத்தை தொடங்கினார். இரண்டாவது நாளான 31ஆம் தேதி காவி உடையில் , சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு தியானத்தை தொடர்ந்தார். பின்னர் மாலை 5.30 மணிக்கு தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது, வெள்ளைநிற வேட்டி, சட்டை அணிந்திருந்த மோடி, பகவதி அம்மன் கால் பாதம் பதிந்த ஸ்ரீபாதம் மண்டபத்தின் அருகில் நின்று சூரிய பகவானை வணங்கினார்.
மூன்றாவது நாளான நேற்று காலை 5.50 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்தின் வெளியே சூரிய உதயத்தை பார்வையிட்ட மோடி, புனித நீரை கடலில் ஊற்றி வழிபாடு செய்தார். பின்னர், விவேகானந்தர் முழு உருவச் சிலையை வணங்கினார். பின்னர், விவேகானந்தர் நினைவு மண்டபத்தைச் சுற்றி வந்து கடல் அழகை ரசித்தார். அங்கிருந்து படிகளில் ஏறி, இறங்கி நடைபயிற்சி மேற்கொண்டார். மூன்றாம் நாள் தியானத்தை காலை 7.30 மணிக்கு தொடங்கி, பிற்பகல் ஒரு மணிக்கு நிறைவு செய்தார். மொத்தம் 40 மணி நேரம் தியானம் மேற்கொண்டார் மோடி. இதன்பின், திருவள்ளுவர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து வணங்கினார். பின்னர், மாலை 3.55 மணிக்கு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்றார்.
Also Read: 12 வயது சிறுவனை கடித்து குதறிய ராட்வைலர் நாய்.. சென்னையில் மீண்டும் பயங்கரம்!