லேப்டாப்க்கு சார்ஜ் போடும்போது விபரீதம்.. பயிற்சி பெண் மருத்துவர் மின்சாரம் தாக்கி மரணம்
நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சரணிதா வயது 32. கடந்த 2016 ஆம் ஆண்டு டாக்டர் உதயகுமார் என்பவருடன் திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் கோயம்புத்தூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருகிறார். சரணிதா மேற்படிப்பு படித்துவரும் நிலையில் இறுதி ஆண்டின் பயிற்ச்சிக்காக சென்னை வந்துள்ளார். இங்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஒரு மாதம் பயிற்ச்சியில் ஈடுபட வந்த அவர் பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கோவை சேர்ந்த பெண் மருத்துவர் சரணிதா. மேற்படிப்பு (எம்.டி) இறுதி ஆண்டை முடித்து 25 நாட்கள் பயிற்சிக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக இருந்து வந்தார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி பெற வந்த இவர், அயனாவரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனது பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், பெண் மருத்துவர் சரணிதா தனது விடுதி அறையில் தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் போட முயன்ற போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெண் மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சரணிதா வயது 32. கடந்த 2016 ஆம் ஆண்டு டாக்டர் உதயகுமார் என்பவருடன் திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் கோயம்புத்தூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருகிறார். சரணிதா மேற்படிப்பு படித்துவரும் நிலையில் இறுதி ஆண்டின் பயிற்ச்சிக்காக சென்னை வந்துள்ளார். இங்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஒரு மாதம் பயிற்ச்சியில் ஈடுபட வந்த அவர் பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். சரணிதாவை நேற்று காலை அவரது கணவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்டநேரமாக அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து சரணிதாவின் கணவர், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்துக்கு போன் செய்து அவரது அறைக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
Also read… ‘மாயி’ பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!
அறைக்குள் இருந்த சரணிதாவிடம் இருந்து பதில் ஏதும் வராததால் இது குறித்து காவல் கட்டுப்பாட்டுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது டாக்டர் சரணிதா லேப்டாப் சார்ஜரை பிடித்தப்படி இறந்து கிடந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.