Fengal Cyclone: சென்னைக்கு 190 கி.மீ தொலைவில் இருக்கும் ஃபெஞ்சல் புயல்.. விடிய விடிய ஆட்டம் காட்டும் மழை..
Weather Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 23 - 24° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” என்ற சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 07 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று, அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, 11.9°N மற்றும் தீர்க்கரேகை 81.5°E, சுமார் 370 கி.மீ திருகோணமலைக்கு வடக்கே, நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70 – 80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும், இது கிட்டத்தட்ட மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்:
FENGAL Update: The CS “FENGAL” moved NNW-wards with a speed of 07 kmph during past 6 hours and lay centred at 0230 hours IST of today, 30th Nov 2024 near latitude 11.9°N and longitude 81.5°E, about 180 km east of Puducherry and 190 km southeast of Chennai.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 30, 2024
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக உருவாகும் என கணிக்கப்பட்டது. வங்கக்கடலில் புயல் உருவாகும் முன்னரே அதற்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டது. ஆனால் இது புயலாக வலுபெறாது ஆழ்ந்த காற்ற்ழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என பின்னர் கணிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகமும் படிபடியாக குறைந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்ற்ழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது, நேற்று சற்று வேகமெடுத்து பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. ஆனால் இரண்டுமே புயலாக வலுபெறாத நிலையில், இம்முறை ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது.
சென்னையில் இருந்து 190 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நகரும் வேகத்தை பொறுத்து இன்று பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் நல்ல மழை பதிவாகி வருகிறது.
Also Read: ஃபெங்கல் புயல்.. சென்னையில் பேருந்துகள் இயங்குமா? முக்கிய அறிவிப்பு
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் விடிய விடிய மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 23 – 24° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு முதல் பலத்த காற்றுடன் அவ்வப்போது கனமழை பதிவாகி வருகிறது. மேலும் இன்று பிற்பகல் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என்ற காரணத்தால் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி மற்றும் அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.