5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fengal Cyclone: சென்னை அருகே கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்.. எப்போது உருவாகும்? எந்த திசையில் நகரும்?

இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Fengal Cyclone: சென்னை அருகே கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்.. எப்போது உருவாகும்? எந்த திசையில் நகரும்?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Nov 2024 07:16 AM

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் நகராமல் அதே இடத்தில் நிலைக்கொண்டுள்ளது. அட்சரேகை 9.0°N மற்றும் தீர்க்கரேகை 82.1°E, கிழக்கு-வடகிழக்கு 100 கி.மீ. திருகோணமலையின், நாகப்பட்டினத்திலிருந்து 320 கி.மீ தென்கிழக்கே, 410 கி.மீ புதுச்சேரிக்கு தென்கிழக்கே, சென்னைக்கு தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30- ஆம் தேதி காலை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் உருவாவதில் நீடிக்கும் தாமதம்:

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மணிக்கு 50 – 60 கி.மீ வேகத்தில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது தொடர்ந்து வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை இது புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது முதலில் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் பின்னர் 10 கி.மீ ஆக குறைந்தது. அதனை தொடர்ந்து 3 கி.மீ வேகமாக குறைந்தது. எனவே தற்சமயம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே கரையை கடக்கும் புயல்:

இது மெல்ல மெல்ல நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும் என்றும் இதற்கு ஃபெங்கல் எனவும் பெயரிடப்படப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னை அருகே மாமல்லப்புரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாயமான தூத்துக்குடி மீனவர்.. கண்டுபிடிக்கக்கோரி கனிமொழி எம்.பி. நேரில் கோரிக்கை!

இதன் காரணமாக இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 30 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest News