Fengal cyclone Live Updates: சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்.. இன்று மாலை கரையை கடக்க வாய்பு.

Tamil Nadu Rains : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது,

Fengal cyclone Live Updates: சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்.. இன்று மாலை கரையை கடக்க வாய்பு.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்

Updated On: 

30 Nov 2024 11:56 AM

LIVE NEWS & UPDATES

  • 30 Nov 2024 11:56 AM (IST)

    சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்..

    தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெங்கல்” என்ற சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று 30 நவம்பர் 2024 காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் அட்சரேகைக்கு 12.3°N மற்றும் தீர்க்கரேகை 80.9°E, சுமார் 120 புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து 200 கி.மீ. வடக்கு-வடகிழக்கே, திருகோணமலைக்கு வடக்கே 420 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி மாலையில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய புயலாக கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Nov 2024 11:14 AM (IST)

    ஃபெஞ்சல் புயல்.. இன்று திரையரங்கம் செயல்படாது என அறிவிப்பு..

    வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் காரணத்தினால் இன்று திரையரங்குகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Nov 2024 10:11 AM (IST)

    இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்..

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்றும் இன்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக 12 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் மாமல்லப்புரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Nov 2024 09:38 AM (IST)

    பலத்த காற்றுடன் சென்னையில் தொடரும் கனமழை..

    சென்னையை நெருங்கும் ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை புயல் கரையை கடக்கும் நிலையில், மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • 30 Nov 2024 08:55 AM (IST)

    வேகமெடுக்கும் ஃபெஞ்சல் புயல்.. தொடரும் கனமழை..

    தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” என்ற சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை நிலவரப்படி, அட்சரேகைக்கு அருகில், 12.2°N மற்றும் தீர்க்கரேகை 81.2°E, சுமார் 150 புதுச்சேரிக்கு கிழக்கே கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., திரிகோணமலைக்கு வடக்கே 400 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி மாலையில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய புயலாக கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Nov 2024 08:04 AM (IST)

    விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்..

    சென்னையில் தொடர் காற்றுடன் மழை காரணமாக புனே, குவைத், மஸ்கட், மும்பை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது. மேலும், ஒழுங்கான சிக்னல் கிடைத்ததும் தரையிறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Nov 2024 07:43 AM (IST)

    நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

    இன்று பிற்பகல் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • 30 Nov 2024 07:38 AM (IST)

    இன்று பிற்பகல் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்..

    வங்கக்கடலில் நேற்று பிற்பகல் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் சென்னை அருகே மாமல்லப்புரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” என்ற சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 07 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று, அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, 11.9°N மற்றும் தீர்க்கரேகை 81.5°E, சுமார் 370 கி.மீ திருகோணமலைக்கு வடக்கே, நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70 – 80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும், இது கிட்டத்தட்ட மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

 

டிஆர்பியில் சன் டிவி & விஜய் டிவி இடையே நடக்கும் கடும் போட்டி
இணையத்தை கலக்கும் நயன்தாராவின் இன்ஸ்டா ஸ்டோரி
மஞ்சள் நீரில் எந்த வைட்டமின் நிறைந்துள்ளது..?
குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!