5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fengal Cyclone: வெள்ளத்தால் ஸ்தம்பித்த விழுப்புரம்.. சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!

Flood: தமிழ்நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த வெள்ளத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலை ஸ்தம்பித்து போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Fengal Cyclone: வெள்ளத்தால் ஸ்தம்பித்த விழுப்புரம்.. சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!
வெள்ள நீர் (Image: chennaitrafficpolice)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 02 Dec 2024 15:45 PM

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று முன் தினம் இரவு கரையை கடந்தாலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 300 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மழை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்து வருகிறது. இந்த அதீத மழை காரணமாக, தமிழ்நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த வெள்ளத்தால் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை ஸ்தம்பித்து போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Krishnagiri: திக்குமுக்காடும் கிருஷ்ணகிரி.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

பொதுவாகவே, எந்தவொரு புயலாக இருந்தாலும் கரையை கடக்கும் வரையிலும், கரையை கடக்கும்போதிலும் அதிக பாதிப்பை உண்டாகும். ஆனால், இந்த முறை சற்று வித்தியாசமாக ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகு, தமிழ்நாட்டில் உள்ள உள்மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்கொண்டு மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதற்கு காரணம், புயலாக இருந்தது ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அதனை தொடர்ந்து, அரபிக்கடலை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நகரும் வேகம் குறைந்ததால் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழையானது கொட்டி தீர்த்தது.

ரெட் அலர்ட்:

புயலின்போது 21 செ.மீ அளவு மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டும். ஆனால், நேற்றைய தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 51 செ.மீ மழை பெய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையாக் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும், சென்னை – திருச்சி ரயில் பாதைகளில் மழை நீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது. இதனால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் நெடுஞ்சாலையில் செல்ல முடியாமல் தவித்து வருகிறது. மேலும், மதுரைக்கு புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் உள்ளிட்ட இரண்டு முக்கியமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்தில் மாற்றம்:

முன்னதாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருவழிப்பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால், முற்றிலுமாக தடைப்பட்டது. அதாவது, விழுப்புரத்தில் உள்ள அரசூர் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையை வெள்ள நீர் மூழ்கடித்தால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

அதேபோல், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரை திட்டமிட்டப்பட்டிருந்த ரயில்கள் தற்போது அரக்கோணம் வரை நிறுத்தப்பட்டு வருகிறது.

எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு கனமழை..?

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 23 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 51 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ மழையும், தர்மபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ. மழையும், கள்ளக்குறிச்சி திருப்பாலபந்தலில் 32 செ.மீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 23 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: நேற்று ஜாமின், இன்று மினிஸ்டர்.. செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெள்ளம் தொடர்பான உதவிகளுக்கு 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அழைத்து பொதுமக்கள் உதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்துள்ளார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்சளை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமியும், தர்மபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Latest News