Tamilnadu Govt Scheme: வேற லெவல்.. வங்கி கணக்கிற்கே வரும் ரூ.4,000… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசின் முத்தான திட்டம்!

தமிழக அரசு திட்டம்: அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் ரூ.4,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இதன் மூலம் திங்கள்தோறும் 3,500 ரூபாய் மருத்துவப்படிக்கும் ரூ.500 நான்காயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது. இந்த திட்டத்திற்கு வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tamilnadu Govt Scheme: வேற லெவல்.. வங்கி கணக்கிற்கே வரும் ரூ.4,000... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசின் முத்தான திட்டம்!

பணம் (picture credit: Getty)

Updated On: 

26 Sep 2024 17:43 PM

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் ரூ.4,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. தமிழ்நாடு தமிழ் மொழிக்கு தொடர்ந்து தொண்டாற்று வரும்பவர்களை கவுரவித்தும், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கியும் வருகிறது. இதற்கான பல திட்டங்களையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.  அதன்படி, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.

ரூ.4,000 வழங்கும் திட்டம்:

முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் திங்கள்தோறும் 3,500 ரூபாய் மருத்துவப்படிக்கும் ரூ.500 நான்காயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

Also Read: பெண்களுக்கு அள்ளி தரும் தமிழக அரசு.. ரூ.5 லட்சம் மானியம்… உடனே அப்ளை பண்ணுங்க!

தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது.  தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 என அத்திருத்தொண்டு தொடர்கிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெருமக்களிடமிருந்து 2024-2025ஆம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள் என்னென்ன?

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும்,  01.01.2024ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்படவேண்டும். தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு இருக்க வேண்டும்.

தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மண்டில / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை / உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர்க் கூறியதுபோல், திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மண்டல, மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே அனுப்பப்பெற வேண்டும். மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்கள் வழியாக அல்லாது, நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: த.வெ.க மாநாடு.. விஜய்க்கு 33 கண்டீஷன் போட்ட விழுப்புரம் போலீஸ்.. என்ன நடக்குப்போகுது?

சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்களை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழுமூர், சென்னை-600008. என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம். நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் 31.10.2024ஆம் நாளுக்குள் அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்ளுக்கு வந்து சேர வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!