5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Courtallam Waterfalls Flood: பயம் காட்டிய குற்றாலம்.. சர்ரென அதிகரித்த தண்ணீர்.. ஷாக் வீடியோ!

Courtallam Flood: தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில் சிக்கிய நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன்  உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அலறி அடித்து ஓடி வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Courtallam Waterfalls Flood: பயம் காட்டிய குற்றாலம்.. சர்ரென அதிகரித்த தண்ணீர்.. ஷாக் வீடியோ!
குற்றாலம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 17 May 2024 22:07 PM

தென்காசி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளான பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அலறடித்து ஓடினர். இதில் நெல்லை மாவட்டம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் என்ற சுற்றுலா பயணி வெள்ளத்தில் சிக்கியதை தொடர்ந்து அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. சுமார் மூன்று மணி நேரமாக நடத்தப்பட்ட தேடுதலுக்குப் பின்னர் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் வெள்ளப்பெருக்கில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்

 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

வெள்ளப்பெருக்கில் வேறு யாரேனும் சிக்கி உள்ளார்களா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பழைய குற்றாலம் அருவியில் ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களுக்கு உதவியாக உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கில் சுற்றுலா பயணிகள் சிக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் குற்றால அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில் நெல்லை சிறுவனின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Chennai Power Cut: மின் தடையை சந்தித்த சென்னை.. எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இல்லை தெரியுமா?

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்கின்றனர். மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் பயணம் யாரும் எதிர்பாரத வகையில் இது போன்ற உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. தொலைதூர பயணங்கள் மேற்கொள்பவர்கள் தங்களது குழந்தைகளை பாதுக்காப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சுற்றுலாத்தளங்களங்களுக்கு வருகை தரும் பயணிகள் பாதுகாப்பாக அங்குள்ள அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

Latest News