5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Senthil Balaji: “என் உயிர் உங்கள் காலடியில்” முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு.. எமோஷ்னலான செந்தில் பாலாஜி!

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை விமான நிலையத்திற்கே சென்று சந்தித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமலாகத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி சுமார் 471 நாட்களுக்கு பிறகு நேற்று ஜாமீனில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கினார்.

Senthil Balaji: “என் உயிர் உங்கள் காலடியில்” முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு.. எமோஷ்னலான செந்தில் பாலாஜி!
முதல்வர் ஸ்டாலின் – செந்தில் பாலாஜி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Sep 2024 21:26 PM

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை விமான நிலையத்திற்கே சென்று சந்தித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமலாகத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி சுமார் 471 நாட்களுக்கு பிறகு நேற்று ஜாமீனில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கினார்.  பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 15 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், தற்போடு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி மீது 300 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி:

பின்னர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டு காலமாக அவருக்கு ஜாமின் வழங்காமல் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

Also Read: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரூ.25 லட்சம் மதிப்பில் இருவர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் வாரத்த்தில் இரண்டு தினங்கள் – திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, 471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து நேற்று இரவு வெளியே வந்தார். இதனை செந்தில் பாலாஜி ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்ததும் செந்தில் பாலாஜி மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

“என் உயிர் உங்கள் காலடியில்”

இதனை அடுத்து இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஆதரவாளர் பலரும் குவிந்து அவரை சந்தித்தனர். இதோடு கரூர் எம்.பி. ஜோதிமணியும் அவரை இன்று சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கிடையில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லை. பிரதமர் மோடியை சந்திப்பதற்காக  முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலையே டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார். இதனால் சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க  அமைச்சர்கள், எம்ஏல்க்கள் பலரும் இருந்தனர். இவர்களுடன் செந்தில் பாலாஜியும் இருந்தார்.  முதல்வர் ஸ்டாலின் விமான நிலையம் வந்தவுடன் முதல் ஆளாக அவரை சந்தித்து அவருக்கு மஞ்சள் சால்வை வழங்கி அவரது காலில் விழுந்து வணங்கினார்.

இந்த சந்திப்பு குறித்து செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா?

செந்தில் பாலாஜி ஜாமீனில் இருந்து வெளியே வந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கைதுக்கு முன் செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை கவனித்து வந்தார்.

இவர் கைதான பிறகு மின்சார துறையை தங்கம் தென்னரசும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை முத்துசாமியும் தற்போது கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், செந்தில் பாலாஜி வெளியே வந்த நிலையில், அவருக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே ஒதுக்கப்படலாம் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read: இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்குமா? பிரட்டன் எடுத்த முடிவு!

அதேநேரத்தில், நிதித்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய் நிர்வாக துறை, வனத்துறை, சட்டத்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சர்கள் மாற்றமோ அல்லது துறையில் வேறு ஒரு அமைச்சருக்கு மாற்றத் தருவதோ நடைபெறலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest News