சென்னையில் ஷாக்.. 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி..

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சுமார் 1556 கிலோ கெட்டுப்போன கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனை செய்ததில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, தயார் நிலையில் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் கறிகள், பன்னீர் ,மஸ்ரூம், ஆகியவை அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் ஷாக்.. 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி..

இறைச்சி

Updated On: 

09 Sep 2024 16:03 PM

கெட்டுப்போன கறி பறிமுதல்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் அலுவலகத்தில் டெல்லியில் இருந்து பார்சலில் வந்த 1556 கிலோ கெட்டுப்போன கறியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அசைவ உணவு பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சுமார் 1556 கிலோ கெட்டுப்போன கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனை செய்ததில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, தயார் நிலையில் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் கறிகள், பன்னீர் ,மஸ்ரூம், ஆகியவை அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலமாக சென்னை சென்ட்ரல் வந்தடைந்த இந்த கறியானது, இம்மாதம் ஒன்றாம் தேதியே வரவேண்டியது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: ஏஐ டெக்னாலஜியை படிக்க அமெரிக்கா சென்ற கமல்… தீயாய் பரவும் செய்தி

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது உரிய ஆவணங்கள் இல்லை எனவும் எந்த தேதியில் வெட்டப்பட்டது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது உள்ளிட்ட எந்த முறையான ஆவணங்களும் இல்லை என தெரிவித்துள்ளன. மேலும் சென்னையில் எந்தெந்த இடங்களுக்கு சப்ளை செய்யப்பட உள்ளது என்பது குறித்த தெளிவான முகவரி இல்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுபோன்று ரயில்வே பார்சலில் வரும் கெட்டுப்போன கறிகள் எந்தெந்த இடத்திற்கு சப்ளை செய்யப்படுவது என்பதை கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று ரயில்வே பார்சலில் மாமிசம் அனுப்பும் பொழுது உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு, பார்சல் வெளிமாநிலங்களில் இருந்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு துறைக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூரில் இதே போன்று ராஜஸ்தானில் இருந்து ரயில் வந்த 1600 கிலோ கெட்டுப்போன கறி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: காதல் பிரச்சனையால் 17 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்.. அதிர்ச்சியில் மக்கள்..

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை சைதாப்பேட்டையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 1000 கிலோ ஆட்டுக்கால் பறிமுதல் செய்யப்பட்டது. கொட்டுப்போன நிலையில் இருந்த ஆட்டுக்கால் சென்னையில் இருக்கும் பல்வேறு உணவகத்திற்கு அனுப்ப இருந்தது குறிப்பிடத்தக்கது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?