மான்களை விரட்டிய இளைஞர்கள்.. ரூ.15,000 அபராதம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த வனத்துறை!
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மூன்று பேர் வனப்பகுதியில் இருந்த மான்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதற்காக அவர்களுக்கு வனத்துறையினர் ரூ.15,000 அபராதம் விதித்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மூன்று பேர் வனப்பகுதியில் இருந்த மான்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதற்காக அவர்களுக்கு வனத்துறையினர் ரூ.15,000 அபராதம் விதித்துள்ளனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் இயற்கை சூழ்ந்தும் காணப்படும். இதனை கண்டு ரசிக்கவே பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வார விடுமுறை, தொடர் விடுமுறை, கோடை விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அங்குள்ள தொட்டபெட்டா மலை சிகரம், முதுமலை புலிகள் காப்பகம், ஊட்டி ரோஜா பூங்கா உள்ளிட்ட அதிகமான சுற்றுலா தளங்கள் உள்ளன. இதனை கண்டு ரசிக்கவே பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருகை தருவார்கள். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை பார்க்க எண்ணற்ற மக்கள் வருவார்கள்.
மான்களை விரட்டி இளைஞர்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடக, கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிககள் வருகை தருவார்கள். நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்தை பார்க்கமால் திரும்பமாட்டார்கள்.
இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மூன்று பேர் வனப்பகுதியில் இருந்த மான்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதற்காக அவர்களுக்கு வனத்துறையினர் ரூ.15,000 அபராதம் விதித்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் மூன்று பேரும் காரில் வந்துள்ளனர். அப்போது, மசினகுடி-தெப்பக்காடு சாலையில் மன்றாடியார் என்ற வனப் பகுதி வழியாக இவர்கள் காரில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் அவர்கள் காரை நிறுத்தி இருந்தனர்.
Also Read : “பொய்.. பொய்” அதிமுகவுடன் கூட்டணியா? தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அங்கு மான்கள் கூட்டம் கூட்டமாக இருந்தனர். இதனை பார்த்த அவர்கள் வனத்திற்குள் அத்துமீறி நுழைந்ததோடு, அங்கிருந்த மான் கூட்டத்தை விரட்டி அதைப் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்த மான், காட்டிற்குள் அங்குமிங்கும் ஓடியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
அபராதம் விதித்த வனத்துறை
அதில், இளைஞர்கள் மூன்று பேர் காரை சாலையில் நிறுத்தி இருந்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர் காட்டிற்குள் சென்று அங்கிருந்த மான் கூட்டத்தை விரட்டியிருப்பது போன்று வீடியோவில் உள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.
நீலகிரி மாவட்டம், மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் சாலையில் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர்கள்.. ஆந்திராவைச் சேர்ந்த அந்த 3 பேருக்கு ரூ15,000 அபராதம் விதித்த வனத்துறையினர்..#nilagiri #Fourest #viralvideo pic.twitter.com/7Gx20Ed1Oj
— TV9 Tamil (@TV9Tamil) November 18, 2024
இதனை பார்த்த அதிகாரிகள் அந்த மூன்று பேரும் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்தனர். அவர்கள் வெளியே வந்ததும், அவர்களை பிடித்து விசாரித்து அவர்களுக்கு அபராதமும் விதித்தனர். மூன்று பேருக்கும் தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.15,000 அபராதம் விதித்தனர் வனத்துறை அதிகாரிகள்.
Also Read : அரசு பேருந்துகளில் டிக்கெட் புக் பண்ணுறீங்களா? வெளியான முக்கிய அறிவிப்பு!
மேலும், அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த அப்துல்லா கான் (24), முகமது ஆசிப் (25), இப்ராஹிம் ஷேக் (24) ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவோ, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.