Tiruvallur: வீட்டுல விருந்து.. 19 காகங்களை கொன்ற தம்பதி.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

இந்த காகங்களுக்கு உள்ளூர் கடைகளில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி உணவில் கலந்து கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர். எனவே அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tiruvallur: வீட்டுல விருந்து.. 19 காகங்களை கொன்ற தம்பதி.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

18 Dec 2024 09:03 AM

திருவள்ளூர் அருகே காகங்களை கொன்று வீட்டில் வைத்திருந்த தம்பதியினருக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நயப்பாக்கம் காப்புக்காடு அருகே திருப்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் மற்றும் பூச்சம்மா என்ற தம்பதியினர் காகங்களை கொன்று வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவர்களது வீட்டை சோதனை செய்தபோது அங்கு 19 காகங்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில் ரமேஷ் மற்றும் பூச்சம்மா தம்பதியினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்கள் வீட்டில் 4 மகள்கள், ஒரு மகன் மற்றும் நாங்கள் இருவர் ஆகிய 7 பேர் உள்ளோம். அதனால் விருந்து வைப்பதற்காக காகங்களை பிடித்ததாக கூறியுள்ளனர். ஆனால் சாலையோர உணவகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இருக்கும் சிறிய அசைவ உணவகங்களுக்கு இறைச்சிக்காக இந்த காகங்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

Also Read: Karur: தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல்.. போலீசாருக்கு அடையாளம் காட்டிய டாட்டூ!

எச்சரிக்கையோடு அபராதம் 

ஏற்கனவே இதுபோன்ற பூனை, காகம், நாய் போன்ற உயிரினங்கள் இறைச்சிக்காக கொல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் வர்த்தகத்தில் இதுவும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காகங்களுக்கு உள்ளூர் கடைகளில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி உணவில் கலந்து கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர். எனவே அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காகத்தின் இறைச்சியை உட்கொள்வதால் உடல் நலம் பாதிக்காது என தம்பதியினர் தெரிவித்த நிலையில் அதற்காக விஷம் பயன்படுத்தப்படுவது குறித்து வனத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே காகங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது வருத்தமளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே வனத்துறை பாதுகாப்பு சட்டம் 1972 இன் கீழ் காகங்கள் பூச்சிகளாக கருதப்படுவதால் தம்பதியர் இருவரும் கைது செய்யப்படவில்லை என்றும், அவர்களை எச்சரித்து ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன்  வன அத்துமீறல் வழக்குப்பதிவு செய்தோம் எனவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத வர்த்தகம் குறித்து சந்தேகம் இருந்தாலும் காக்கை இறைச்சியின் மாதிரிகள் எதுவும் சோதனைக்காக அனுப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Viduthalai 2: அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? – கேள்வி கேட்ட ரசிகருக்கு விஜய் சேதுபதி பதிலடி!

சோதனை தொடர வேண்டும்

இந்த தம்பதியினர் மீது எந்தவித வழக்குகளும் காவல்துறையில் நிலுவையில் என கண்டறியப்பட்ட நிலையில், மிகவும் பின்தங்கிய பொருளாதார பின்னணியை கொண்டு குடும்பத்தினர் என்பதால் வறுமை காரணமாக இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடைய இந்த விவகாரம் தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசியுள்ள விலங்குகள் நல சரணாலயத்தின் நிறுவனரான சாய் விக்னேஷ் என்பவர், “கடந்த காலங்களில் பூனை இறைச்சியை பிடிக்க காவல்துறைக்கு பலமுறை நான் தகவல் அளித்துள்ளேன். சென்னை – பெங்களூரு, திருவள்ளூர் – திருப்பதி நெடுஞ்சாலைகளில் உள்ள உணவுகளில் இது போன்ற இறைச்சி கலப்பு என்பது நடைபெறுகிறது.. இதனை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது மேற்கண்ட உணவகங்களில் சோதனை செய்ய வேண்டும். அதன் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்ப வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிலையில் காகங்கள் கொல்லப்பட்ட சம்பவம் கவனத்தில்  கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

இணையத்தை கலக்கும் சோபிதாவின் நியூ ஆல்பம்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?
காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
நடிகை ரித்திகா சிங் சினிமா பயணம்