5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: சென்னையில் போதைப்பொருள் கடத்தல்.. சிக்கிய முன்னாள் டிஜிபி மகன்!

போதைப்பொருள் கடத்தல்: சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய வழக்கில் திடீர் திருப்புமாக முன்னாள் டிஜிபியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஒரு காலத்தில் குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் காலப்போக்கில் பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகள் கூட போதைப் பொருள் கலாச்சாரத்துக்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி […]

Crime: சென்னையில் போதைப்பொருள் கடத்தல்.. சிக்கிய முன்னாள் டிஜிபி மகன்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 25 Oct 2024 14:29 PM

போதைப்பொருள் கடத்தல்: சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய வழக்கில் திடீர் திருப்புமாக முன்னாள் டிஜிபியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஒரு காலத்தில் குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் காலப்போக்கில் பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகள் கூட போதைப் பொருள் கலாச்சாரத்துக்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகளும் இடம்பெறுவதால் பெற்றோர்கள், ஆசிரியர்கள்,  சமூக ஆர்வலர்கள் கவலையடைந்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் போதைப்பொருள் நடமாட்டம், கடத்தல் போன்ற சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை இந்த மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கலாச்சாரத்தால் சீரழிவதாக சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் தமிழகத்தில் சமீப காலமாக நடைபெறும் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் இளம் வயதினர் பெரும்பாலானோர் போதைக்கு அடிமையானவர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்கFixed Deposit : 9.50% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

இப்படியான நிலையில் தான் அதிக போதையை கொடுக்கும் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இந்த போதை பொருளை தயாரிக்க சூடோபெட்ரின் என்கிற வேதிப்பொருள் உதவுகிறது. இந்த போதை பொருளை கடத்தியதாக தான்  சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதி கைது செய்யப்பட்டார். இதனை கடத்தி விற்றால் அதிக கமிஷன் கிடைக்கும் என்பதால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் எளிதாக போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Traffic Diversion: வாகன ஓட்டிகளே! – சென்னை அடையாறில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!

இதனிடையே சென்னை நந்தம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் போதை பொருளை கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களில் இருவர் நைஜீரியாவை சேர்ந்த ஜான் எஸி மற்றும் மெக்கலன் என்ற சிக்கிய நிலையில் மூன்றாவதாக  அருண் என்ற நபர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அருண் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் மகன் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 2.5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டில் போதைப்பொருள் தயாரித்த 7 பேர்

இதனிடையே சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக இரு தினங்களுக்கும் முன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

அவர்களை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. தேனாம்பேட்டையை சேர்ந்த பிளமிங் பிரான்சிஸ், பூந்தமல்லியைச் சேர்ந்த நவீன்,  கொடுங்கையூர் பின்னிநகர் மெயின் ரோட்டை சேர்ந்த பிரவீன் பிரணவ், நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த கிஷோர், ஞான பாண்டியன், கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த அருண்குமார், மணலியை சேர்ந்த தனுஷ் ஆகிய ஏழு பேரும் போதைப்பொருளை தயாரித்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் பிரவீன் பிரணவ், கிஷோர், நவீன், தனுஷ் ஆகிய 4 பேரும் சென்னை ராமாபுரத்தில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பதும், ஞான பாண்டியன் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதுகலை வேதியியல் படித்து வந்ததும் தெரிய வந்தது.

இவர்கள் 5 பேரும் கொடுங்கையூர் பின்னி நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள பிரவீன் பிரணவ் வீட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்க பல நாட்களாக திட்டமிட்டு அதற்கான பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என கண்டறியப்பட்டது.  போதைப்பொருளை தயாரித்து விற்பனை செய்யும் போது லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு வீட்டிலேயே ஆய்வகத்தை தொடங்கி தயாரித்துள்ளனர்.  அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Latest News