5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மீண்டும் சிக்கல்.. சென்னையில் கார் பந்தயம் நடக்குமா? நீதிமன்றம் முக்கிய முடிவு!

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாரர் தரப்பில் பொறுப்பு தலைமை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையீடு செய்தனர்.

மீண்டும் சிக்கல்.. சென்னையில் கார் பந்தயம் நடக்குமா? நீதிமன்றம் முக்கிய முடிவு!
சென்னை ஃபார்முலா கார் பந்தயம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Aug 2024 11:11 AM

ஃபார்முலா 4  கார் பந்தயம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் சென்னை தீவுத்திலை சுற்றி 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தை 8000 பேர் வரை நேரில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில்,  சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Also Read: நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மழை பெய்யுமா? அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

அந்த மனுவில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி ஆகிய தேதிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது. கார் பந்தயம் நடத்தப்படும் போது அண்ணா சாலை, நேப்பியர் பாலம் மற்றும் சிவானந்தா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.

சென்னையில் கார் பந்தயம் நடக்குமா?

பந்தயம் காரணமாக அன்றாடம் அந்த சாலையை பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படுவர்கள் எனவும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கார் பந்தயம் நடத்துவது மோட்டார் வாகன விதிகளுக்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தாமல் அமைச்சர் உதயநிதி கார் பந்தயத்தில் கவனம் செலுத்துவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும்  சென்னையில் இந்த கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழகத்துக்கு வருகிறது மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. எந்தெந்த ரூட் தெரியுமா?

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று பகல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சன்னி ஷீன், பொறுப்பு தலைமை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையீடு செய்தனர். இதையடுத்து நீதிபதிகள் மனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிந்தால் இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக கூறியிருந்தனர். ஆனால், இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுப்படும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Latest News