5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சென்னை வாசிகளுக்கு சூப்பர் நியூஸ்.. வேளச்சேரி – கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை தொடக்கம்.. எப்போது?

மக்கள் தொகை அதிகரிப்பால் சென்னையில் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் வசதிக்காக பல்வேறு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பேருந்து போக்குவரத்தை தவிர பறக்கும் ரயில், புறநகர் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்காக உள்ளது. நாள் தோறும் இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வாசிகளுக்கு சூப்பர் நியூஸ்.. வேளச்சேரி – கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை தொடக்கம்.. எப்போது?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 28 Oct 2024 23:30 PM

நாளை முதல் வேளச்சேரி முதல் கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. சுமார் ஒராண்டுக்கு பின் இந்த சேவை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. கடந்த ஆண்டு கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக வேளச்சேரி முதல் கடற்கரை வரையிலான ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது. அதாவது, சென்னை வேளச்சேரி முதல் சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு மக்கள் வேலைக்காக, படிப்பிற்காக குடிபெயர்ந்துள்ளனர். இதனால் சென்னையில் தற்போது அதிகப்படியான மக்கள் தொகை உள்ளது.


மக்கள் தொகை அதிகரிப்பால் சென்னையில் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் வசதிக்காக பல்வேறு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பேருந்து போக்குவரத்தை தவிர பறக்கும் ரயில், புறநகர் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்காக உள்ளது. நாள் தோறும் இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் பறக்கும் ரயில் சேவை முதலில் கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை இயக்கப்பட்டது, பின்னர் மெல்ல மெல்ல மக்களின் வசதிக்காக வேளச்சேரி வரை சேவை நீடிக்கப்பட்டது. முதலில் 6 பெட்டிகளுடன் இந்த ரயில் சேவை இயக்கப்பட்டது. பின்னர் மக்களின் கூட்டம் கருதி 9 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. இந்த ரயில் 15 நிமிடங்கள் இடைவெளியில் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க: ”ஆஃபர் என்பது அரசியலில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும்” – விஜய்க்கு பதிலடி கொடுத்த திருமா..

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை 3 வழித்தடம் உள்ளது. இதில் இரண்டு வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில் சேபை இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள ஒரு வழித்தடத்தில் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கூடுதல் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் இருந்து வந்தது.

மேலும் 4வது வழித்தடம் அமைக்க வேண்டும் என மக்கள் தரப்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தது. மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், இதற்கு ரூ.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மேலும் படிக்க: த.வெ.க மாநாட்டிற்கு வந்த 6 பேர் உயிரிழப்பு.. இரங்கல் தெரிவித்த கட்சி தலைவர் விஜய்..

அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த முதல் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சென்னை வேளச்சேரி முதல் சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பணிகள் முடிவுக்கு வரும் நிலையில் நாளை முதல் மீண்டும் வேளச்சேரி முதல் கடற்கரை வரை பறக்கும் ரயில் சேவை அதாவது புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest News