5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gas Cyliner Price: குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. LPG விலை நிலவரம் இதோ!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் காலையில் விலை மாற்றம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Gas Cyliner Price: குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. LPG விலை நிலவரம் இதோ!
கேஸ் சிலிண்டர் விலை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Jul 2024 08:12 AM

வணிக பயன்பாடு LPG விலை குறைந்தது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் காலையில் விலை மாற்றம் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஜூலை 1ஆம் தேதியான இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக் பயன்பாடு சிலிண்டர் வில ரூ.31 குறைந்து ரூ.1,809.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Also Read: சென்னையில் இன்று மின்தடை… லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?

கேஸ் சிலிண்டர் விலை என்ன?

கடந்த ஜூன் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்து, ரூ.1,840க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல கடந்த மே 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைந்து, ரூ.1,911க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30.50 காசுகள் குறைந்து ரூ.1,930க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் மேலும், ரூ.31 காசுகள் குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது. 14 கிலோ எடை கொண்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண்ணிக்கை மொத்தம் 14.45 கோடியாக உள்ளது. இதில், தற்போது 10 கோடியே 55 லட்சத்து 263 பேர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 51 லட்சம் நுகர்வோர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளனர். இதில், 1.6 லட்சம் பேர் மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நாடு முதல் உலகம் வரை.. இன்றைய முக்கியச் செய்திகள் இதோ!

Latest News