TN Ministers: 3 அமைச்சர்கள் நீக்கம்.. 2 பேருக்கு வாய்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

அமைச்சர்கள் நீக்கம்: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பல அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய முகங்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். கோவை செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அதேபோல, செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

TN Ministers: 3 அமைச்சர்கள் நீக்கம்.. 2 பேருக்கு வாய்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான்

Updated On: 

28 Sep 2024 23:28 PM

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பல அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய முகங்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் பணி காரணமாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை. மக்களவை தேர்தல் முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் அப்போது மாற்றப்படவில்லை.

மூன்று அமைச்சர்கள் நீக்கம்:

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வெளியே வந்தவுடன் அமைச்சரவையில் மாற்ற செய்யலாம் என ஸ்டாலின் கூறியதாக சொல்லப்பட்டது. அதேபோல, நேற்று முன்தினம் செந்தில் பாலாஜி சிறையில் வெளியே வந்திருக்கிறார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. இதில் பல அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய முகங்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக பதில் நான்கு பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. யார் யாருக்கு என்ன பதவி?

அதில் இரண்டு புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறுபான்மைத் துறை அமைச்சர்  செஞ்சி மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர்  மனோ தங்கராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

2 பேருக்கு மீண்டும் அமைச்சர் பதவி:

அதே நேரத்தில், கோவை செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.  இவர்களுக்கு துறை இன்னும் ஒதுக்கப்படவில்லை. நாளை இவர்களுக்கான துறை பற்றிய விவரங்கள் வெளியாகும்.

செந்தில் பாலாஜி மற்றும் நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அவரது அமைச்சர் பதவி கை நழுவியது. அதேபோல, நாசர் குறித்து பல சர்ச்சைகள் வெளியானதால் அவர் அமைச்சரவையில் நீக்கப்பட்டார்.  இந்தநிலையில், இவர்கள் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான துறை ஒதுக்கீடு குறித்த விவரங்கள் நாளை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

யார் யாருக்கு எந்த துறை?

இதோடு இல்லாமல் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வராகிறார் உதயநிதி:

விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று சமீப காலமாகவே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், எப்போது என்று மட்டும் சஸ்பென்ஸாக இருந்து வந்தது. முதல்வர் ஸ்டாலின அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, வலுத்திருக்கிறது, பழுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

Also Read: திமுக கூட்டணியில் பிளவா? பவள விழா பொதுக் கூட்டத்தில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 3.30 பதவியேற்கிறார். மேலும், உதயநிதிக்கு திட்டம், வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வசம் இருந்த திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை தான் கூடுதலாக உதயநிதிக்கு ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, விளையாட்டுத்துறை அமைச்சராகவும் உதயநிதி ஸ்டாலின் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!