இனி நாய்கள் தொல்லை குறையும்.. மாநகராட்சி தரப்பில் அமைக்கப்படும் நாய்கள் கருத்தடை மையம்..

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு 14,885 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இனி நாய்கள் தொல்லை குறையும்.. மாநகராட்சி தரப்பில் அமைக்கப்படும் நாய்கள் கருத்தடை மையம்..

கோப்பு புகைப்படம்

Published: 

19 Nov 2024 18:29 PM

சென்னை மாநகராட்சியில் நவீன முறையில் தயாராகி வரும் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை. மேலும், – நவீன அறுவை சிகிச்சை மையம், தடுப்பூசி செலுத்தும் மையம், மருத்துவமனை என சென்னையில் 3 இடங்களில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதோடு உயிரிழந்த செல்லப்பிராணிகளை கேஸ் மூலம் எரியூட்டுவதற்கு நவீன் தகனமேடை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது பொதுமக்களுக்கு தீரா பிரச்சனையாக மாறியுள்ளது. அதிகாலையில் அல்லது இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் நபர்களை துரத்துவது மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை:

இதனை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது டோல் ஃப்ரீ எண்ணிற்கு கால் செய்து குறிப்பிட்ட ஏரியாவில் இருக்கும் நாய்கள் பிரச்சனை குறித்து புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க: ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்.. எத்தனை நாட்களுக்கு? சிகிச்சை முறை என்ன?

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு 14,885 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்தில் நடத்தப்பட்ட தெரு நாய்கள் கணக்கெடுப்பில் சென்னை மாநகராட்சி பகுதியில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக தரவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் புதிய இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கென பிரத்யேக கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை சென்னை விலங்குகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: ஷாக் கொடுக்குமா வெங்காயம் விலை.. அதிகரிக்க என்ன காரணம்? ஆனியன் வரலாறு!

நவீன கருத்தடை மையங்கள்:

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த மையங்களில் தினமும் தலா 30 நாய்களுக்கு என ஆண்டுக்கு 9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள நவீன அறுவை சிகிச்சை அரங்கம், நாய்களை தங்க வைப்பதற்கான கூண்டுகள், விலங்களுக்கு தேவையான உணவுகளை சமைப்பதற்கான உணவு கூடங்கள், செல்லப்பிராணிகளை பரிசோதனை செய்வதற்கான அறைகள், மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான அரங்கு என நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: 23 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்த திசையில் நகரும்?

மேலும் உயிரிழந்த விலங்குகளை தகனம் செய்வதற்கு கேஸ் மூலம் எரியூட்டப்படும் நவீன தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நாய்களுக்கான கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் நாய் கருத்தடை சிகிச்சை ஆண்டுக்கு 27,000-ஆக அதிகரிக்கும் என மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

காதலில் பிரச்னையை உண்டாக்கும் சின்ன பொய்கள்!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்..
தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?