5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Traffic Diversion: சென்னை விமான கண்காட்சி.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வான் சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகைகள் நடந்து வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் தேதி நடக்கும் விழாவில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Chennai Traffic Diversion: சென்னை விமான கண்காட்சி.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 04 Oct 2024 21:30 PM

சென்னை விமான கண்காட்சி: 92வது இந்திய விமானப்படை ஆண்டு விழா சென்னை மெரினா கடற்கரையில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விமானங்களின் சாகச கண்காட்சி நடைபெற உள்ளது.இந்தியாவின் அதிநவீன விமானங்கள் முதல் பாரம்பரிய விமானங்கள் வரை அனைத்து விமானங்களும் இதில் இடம் பெறுகிறது. ரபேல், தேஜஸ், உள்ளிட்ட இந்திய போர் விமானங்கள், இந்தியாவில் தயாரிக்கபட்ட தேஜஸ், பிரசாந்த், ஹச் டி டி 40 ஆகிய விமானங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெறுகிறது. வான் சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகைகள் நடந்து வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் தேதி நடக்கும் விழாவில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனால் அன்றைய தினம் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் கண்காட்சி பார்க்க வரும் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் இடங்களுக்கான அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

Also Read: Chennai Powercut: சென்னையில் அக்டோபர் 5ல் எங்கெல்லாம் மின்தடை.. முழு விபரம்!

போக்குவரத்து மாற்றம்

  • சென்னை காமராஜர் சாலையில் காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையேயான பகுதியில் அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்ய ஆர் கே சாலைக்கு பதிலாக வாலாஜா சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  • திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கி வாகனங்கள் வருவதற்கு தடை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம், அண்ணா சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதே போல் பாரிஸ் கார்னரில் இருந்து வரும் திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்களும் தங்களுடைய இலக்கினை அடைய அண்ணா சாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
  • அண்ணா சாலையிலிருந்து சென்னை மாநகர பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே சந்திப்பும் ஐஸ் அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலை, டிடிகே சாலை, ஆர்.கே.சாலை, அண்ணா சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, வாலாஜா சாலை, கதிட்ரல் சாலையில் காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

Also Read: Narayanpur Encounter: சத்தீஸ்கரில் போலீசார் அதிரடி தாக்குதல்.. 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகள்

  • காமராஜர் சாலை: கடற்கரை சாலை (விஐபி மற்றும் விவிஐபி கார் பார்க்கிங்), பிரசிடென்சி கல்லூரி, சுவாமி சிவானந்த சாலை,
    லேடி வெலிங்டன் கல்லூரி ( நீல வண்ண பாஸ் மட்டும்)
  • சாந்தோம் சாலை: காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப்பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மைதானம், கதிட்ரல் ஆரம்பப்பள்ளி, சாந்தோம் சமுதாயக்கூடம், லூப் ரோடு (ஒரு பக்கம் மட்டும்)
  • ஆர்கே சாலை:  MRTS லைட் ஹவுஸ் சாலை, என்கேடி பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு), குயின் மேரிஸ் கல்லூரி, புனித எபாஸ் பள்ளி
  • வாலாஜா சாலை:  கலைவாணர் அரங்கம், ஓமாந்தூரார் மருத்துவமனை (பிரஸ் கிளப் சாலையின் நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம்
  • அண்ணா சாலை: தீவுத்திடல் மைதானம், pwd மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்), மன்றோ சாலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, MRTS சிந்தாதிரிப்பேட்டை.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

மேலே குறிப்பிட்ட வாகன நிறுத்துமிடங்கள் காலை 9:30 மணிக்கு மூடப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் நிகழ்ச்சியை பார்வையிட விரும்பினால் விரைவில் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணமாக அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை முழுவதும் சிரமம் இல்லாமல் பயணிக்க மாநகர பேருந்துகள் மெட்ரோ ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் போன்ற பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மாநகர போக்குவரத்துக் கழகங்களின் மினி பேருந்துகள் மூலம் அண்ணாசாலை மெட்ரோவில் இருந்து சிவானந்தா சாலை டிவி ஸ்டேஷன் வரையிலும், வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் வரையிலும், ஆர்கே சாலையில் விஎம் சந்திப்பு வரையிலும் மாநகரப் பயணிகளை ஏற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Latest News