5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Marriage : “கணவரை சுற்றுலாவுக்கு அனுப்புவேன்”.. மணப்பெண்ணிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்!

Friends Atrocity | மணக்கோளத்தில் இருக்கும் மணப்பெண்ணிடம் மண மேடையிலே வைத்து நண்பர்கள் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ஏன் அவர்கள் மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

Marriage : “கணவரை சுற்றுலாவுக்கு அனுப்புவேன்”.. மணப்பெண்ணிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்!
மாதிரி புகைப்படம் (Navaneeth/Moment/Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 15 Sep 2024 19:11 PM

மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய நண்பர்கள் : மயிலாடுதுறையில் திருமணம் முடிந்த கையோடு மணமகளிடம் மணமகனின் நண்பர்கள் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மணக்கோளத்தில் இருக்கும் மணப்பெண்ணிடம் மண மேடையிலே வைத்து நண்பர்கள் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ஏன் அவர்கள் மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Harassment : கூட்டு பாலியல் வன்கொடுமை.. மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்த செவிலியர்!

திருமணம் முடிந்த கையோடு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய நண்பர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஒரு ஊரில் முத்துக்குமார், பவித்ரா என்ற ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் மண மேடையிலே வைத்து மணமகளிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். அதாவது திருமணத்திற்கு பிறகு கணவரை நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு அனுப்புவேன் என்றும், கணவர் சுற்றுலா செல்ல தடையாக இருக்க மாட்டேன் என்றும் அவர்கள் பத்திரத்தில் குறிப்பிட்டு மணமகளிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி மைனா திரைப்படத்தில் வருவதை போல எப்போ வரீங்க என கேட்டு தொந்தரவு செய்ய கூடாது எனவும் அவர்கள் அந்த பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். மணமகனின் நண்பர்கள் செய்த இந்த செயலின் வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க : Thirumavalavan : அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம்.. செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் மற்று வீடியோக்களின் கீழ் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுதான் உண்மையான நட்பு என்றும் எனது திருமணத்தின் போது இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் போய்விட்டது என்றும் பலரும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் விளையாட அனுமதி கேட்ட நண்பர்கள்

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த நண்பர்கள் சிலர், தனது நண்பனை திருமணத்திற்கு பிறகும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் மண மேடையிலே வைத்து மணமகளிடம் கையெழுத்து வாங்கினர். அவர்கள் தயாரித்து வைத்திருந்த பத்திரத்தில் திருமதி.பூஜா என்னும் நான் சூப்பர் ஸ்டார் அணியின் கேப்ட்டனும் எனது கணவருமான திரு.ஹரி பிரசாத அவர்களை இன்று முதல் வரும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சூப்பர் ஸ்டார் அணிக்கு கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறேன் என்று அச்சடித்து மணமளிடம் கையெழுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..

திருமணம் முடிந்த பிறகு ஏற்படும் மாற்றங்கள்

பொதுவாக திருமணத்திற்கு பிறகு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அதுவரை பெற்றோரின் வளர்ப்பிலும், பாதுகாப்பிலும் இருந்த இரண்டு தனிநபர்கள் ஒன்றாக இணைந்து ஒரு குடும்பத்தை உருவாக்கி அதை பாதுக்காக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில், குடும்ப பொறுப்பு, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கணவன், மனைவி இருவரும் தாங்கள் இதற்கு முன்பு செய்த வேலைகளை செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக விளையாட்டு, நண்பர்கள் உள்ளிட்ட சில சுவாரஸ்யங்களை இழக்க கூடிய அல்லது தவிர்க்க கூடிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக உருவாகும் பிரச்னைகள் விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படிங்க : Naan Mudhalvan Scheme: ஜெர்மணியில் செம்ம வேலை.. செவிலியர்களுக்கு இலவச விசா, டிக்கெட்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு விரும்பமானவற்றை செய்ய அனுமதிப்பது ஒரு ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News