ரூ. 30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா.. புதிய அம்சங்களுடன் சூப்பர் ஸ்பாட்..
வேடந்தாங்கல் சரணாலயத்தில் வரும் பறவைகளான நாரயண பட்சி, இராக்கொக்கு, கரண்டி வாயன் உள்ளிட்ட பறவைகளுக்கு பிரம்மாண்டமான முறையில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏரிகள், ஆறுகள், சதுப்பு நிலங்களில் இருக்கும் பறவைகள் என்பதால் தண்ணீர் தேங்கி வைக்கும் அளவில் சிறிய குளங்கள் போன்ற அமைப்பு இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா: சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை 30 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையின் மைய பகுதியில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பளவு உடையது. இங்கு, பாம்பு உள்ளிட்ட 11 வகையான, 46 ஊர்வனங்கள், 68 பாலுாட்டி உயிரினங்கள் மற்றும் 21 வகையான 314 பறவைகளும் உள்ள இந்த பூங்காவில் தற்போது வன விலங்குகள் மற்றும் பூங்காவை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு நவீன வசதிகளுடன் பூங்காவின், முகப்பு, விலங்குகள் மையம், கற்றல் நூலகம், ஜூ கஃபே, வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்டவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
#கிண்டி_சிறுவர்_பூங்கா pic.twitter.com/UOl2PZZSjo
— M.K.Stalin (@mkstalin) August 3, 2024
வேடந்தாங்கல் சரணாலயத்தில் வரும் பறவைகளான நாரயண பட்சி, இராக்கொக்கு, கரண்டி வாயன் உள்ளிட்ட பறவைகளுக்கு பிரம்மாண்டமான முறையில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏரிகள், ஆறுகள், சதுப்பு நிலங்களில் இருக்கும் பறவைகள் என்பதால் தண்ணீர் தேங்கி வைக்கும் அளவில் சிறிய குளங்கள் போன்ற அமைப்பு இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பாம்பு வகைகள் கட்டுடல் மலைப்பாம்பு, பர்மா மலைப்பாம்பு, இந்திய மலைப்பாம்பு, நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், சாரைப்பாம்பு போன்றவைகள் இருக்கும் இடங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மான் வகைகள், நரி, கேளையாடு போன்ற விலங்குகளை பொதுமக்கள் தெளிவாக பார்க்கும் விதமாக வலைகளுக்கு இடையே உடையாத வகையில் கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெயில் காலங்களில் உயிரினங்கள் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வயநாடு நிலச்சரிவு.. ஆய்வு மேற்கொண்ட நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி நிதியுதவி..
பூங்காவிற்கு வரும் சிறுவர்கள் ஒவ்வொரு உயிரினங்கள் உள்ள இடங்களிலும் உயிரினங்களின் விவரங்களை சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள பாதைகள் கழிவரைகள் என அனைத்து இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அனுவதற்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்கள் விளையாடுவதற்கு புதிய உபகரணங்கள் அமைக்கப்பட்டு செல்பி பாயிண்ட்களும் அமைக்கப்பட்டுள்ளது.
வன விலங்கள், சுற்றுச்சூழல் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் நவீன நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல் கல்வி கற்கும் இடமாகவும் மாற்றியுள்ளனர் என அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடந்த காலத்தை விட தற்போது கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது வரும் பொதுமக்களுக்கு மட்டும் வசதிகளை மேற்கொள்ளாமல் இங்குள்ள உயிரினங்களுக்கும் தேவையான வசதிகளை செய்துள்ளனர் என பாராட்டுந்தெரிவித்தனர்.