5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் இது தான் தண்டனை.. சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் எனவும், கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் எனவும் தெரிவித்தார்.

தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் இது தான் தண்டனை.. சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
உயர்நீதிமன்றம்
umabarkavi-k
Umabarkavi K | Published: 12 Aug 2024 18:51 PM

குண்டர் சட்டம்: சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் காலை வழக்குகளை விசாரிக்கத் துவங்கும் முன், சுதந்திர தினத்தை ஒட்டி குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் முறையீடு செய்தார். அப்போது, தேசியக் கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி, சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் எனவும், கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் எனவும் தெரிவித்தார்.

Also Read: சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எத்தனை நாளைக்கு? வெளியான முக்கிய அறிவிப்பு!

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம்:

இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளையர்களிடம் விடுதலை பெற்றது. அதன் நினைவாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு 78வது சுதந்திர தின விழாவை கொண்டாட தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஒத்திகை நிகழ்ச்சிகள், 3 வண்ண கொடி விற்பனை அனைத்தும் கலைக்கட்ட தொடங்கியுள்ளது.  சுதந்திர தினத்தன்று வீடுகள், அலுவலகள், கல்வி நிறுவனங்களில் தேசியடிக் கொடி ஏற்றுவார்கள். மேலும், இந்திய பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றுவார்.  இப்படியான சூழலில் தான், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது.  தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 9 ஆயிரம் போலீசார் குவிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார். சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின்தடை.. லிஸ்டில் இருக்கும் ஏரியாக்கள் இதோ!

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் கூடுதல் ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Latest News