கோமாவுக்கு சென்ற ஆணின் கை தானம்.. இளைஞருக்கு பொருத்தி சாதனை!
ஏப்ரல் 21 அன்று, திருச்சியில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 55 வயது முதியவரின் கைகள் கார்த்திக்கிற்கு ஒதுக்கப்பட்டதாக தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைப்பு வந்தது. கைகளை தானம் செய்பவரிடம் இருந்து கைகள் எடுக்கப்பட்ட பின்னர் மூன்று மணி நேரத்திற்குள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட காயம் காரணமாக ரியல் எஸ்டேட் ஆலோசகரான கார்த்திக் என்பவரின் கைகள் மணிக்கட்டில் இருந்து கீழே துண்டிக்கப்பட்டன. 31 வயதான அவர் க்ளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு உள்ள மருத்துவர்கள் அவரை கை மாற்று அறுவை சிகிச்சைக்காக அவரை காத்திருப்பு பட்டியளில் வைத்தனர்.
ஏப்ரல் 21 அன்று, திருச்சியில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 55 வயது முதியவரின் கைகள் கார்த்திக்கிற்கு ஒதுக்கப்பட்டதாக தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைப்பு வந்தது. கைகளை தானம் செய்பவரிடம் இருந்து கைகள் எடுக்கப்பட்ட பின்னர் மூன்று மணி நேரத்திற்குள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. மதியம் 2.10 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது, மாலை 6 மணிக்குள் மருத்துவர்கள் வலது கைகான இரத்த ஓட்டத்தை உறுதி செய்தனர். 45 நிமிடங்களுக்குப் பிறகு, இடது கைக்கு இரத்த ஓட்டத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆபரேஷன் தியேட்டரில் குறைந்தது 18 மருத்துவர்கள் பணியாற்றி பதினாறு மணி நேரத்தில் அதிகாலை சுமார் 1.30 மணிக்கு அறுவை சிகிச்சையை முடித்தனர்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு கார்த்திக் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கார்த்திக் போலவே, மருத்துவமனையில் கைகளுக்காக காத்திருப்புப் பட்டியலில் உள்ள 22 வயது மாணவன் புவன், ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்தார். அங்கு வேலை நேரத்தில் அவரது வலது கை இயந்திரத்தால் நசுங்கி தனது கையை இழந்தார். அவருக்கும் ஏற்ற கைகள் இருப்பதாக வந்த அறிவிப்பின் படி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
Also read… ரேசன் கடையின் நேரம் மாறுதா? தீயாய் பரவிய தகவல்.. தமிழக அரசு விளக்கம் இதோ!
புவனுக்கு கைகளை தானமாக அளித்தவர் 22 வயதுடைய பெண், அனியூரிசிம் (aneurysm) காரணமாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட அந்த பெண்ணின் கைகள் காலை 7.45 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. 14 மணி நேரம் அறுவை சிகிச்சைக்கும் பின்னர், புவனுக்கு ஒரு புதிய கை கிடைத்தது. “ஒட்டுமொத்தமாக, இரண்டு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக நடைபெற்றது, கடந்த வாரம் கார்த்திக் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அடுத்த வாரம் புவன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மூத்த ஆலோசகர் டி.ஆர்.செல்வ சீதா ராமன் கூறியுள்ளார்.