Chennai Rain Update: சாலைகளில் சூழத்தொடங்கிய மழைத்தண்ணீர்.. அச்சத்தில் சென்னை மக்கள்!
சென்னை அரும்பாக்கம் நூறடி சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. ஒருவழிப்பாதை வழியாக இருவழி போக்குவரத்து நடைபெற்று வருவதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சமூக வலைத்தளம் மூலமாக தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளை வாகன ஓட்டிகள் தவிர்க்கும் பொருட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
சென்னையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது. நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றே மழை வேலையை காட்டுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். அதேசமயம் சென்னை கிண்டி நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் 300 நிவாரணம் மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தண்ணீர் தேங்கியுள்ளதால் இரண்டு சுரங்க பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் 89 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பருவமழையால் ஏற்படும் நோய் தொற்றுகளை தடுக்கும் வகைகள் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் வருஷம் ஆகாமல் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை அரும்பாக்கம் நூறடி சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. ஒருவழிப்பாதை வழியாக இருவழி போக்குவரத்து நடைபெற்று வருவதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சமூக வலைத்தளம் மூலமாக தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளை வாகன ஓட்டிகள் தவிர்க்கும் பொருட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் சென்னை தாம்பரம் அருகே மூலசேரி பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 4 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதேபோல் காஞ்சிபுரம் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Dear #Chennaiites,
Motor pumps are installed in various locations to dewater rainwater.#ChennaiRains#ChennaiCorporation#HereToServe#NorthEastMonsoon#ChennaiRainsUpdate pic.twitter.com/GG0RjP0YM5
— Greater Chennai Corporation (@chennaicorp) October 15, 2024
இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில், தமிழக அரசு உறங்காமல் சென்னையில் மழையின் அளவை கண்காணித்து வருவதாகவும், மரங்கள் விழுந்தால் உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் மழையால் பாதிக்கப்படும் தாழ்வான பகுதிகளில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பையும் கல்வி நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மழை மற்றும் காற்று சீற்றம் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்தடை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படலாம் என்பதால் ஆன்லைன் வகுப்பை நிலைமையை சரியாகும் வரை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read: Tamil Nadu Rains Live Updates: பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை – துணை முதல்வர் விளக்கம்
மேலும் சென்னையில் கனமழையால் பாதிக்கப்படும் பொதுமக்கள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்படும் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை கொடுக்க வருமாறு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் தற்போது வரை போக்குவரத்து எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சீராக சென்று கொண்டிருக்கும் நிலையில் தண்ணீரின் அளவை பொறுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எவ்வளவு கனமழை பெய்தாலும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அப்டேட் கொடுத்துள்ளது. அதேசமயம் தெற்கு ரயில்வே, காவல்துறை, வனத்துறை, சென்னை மாநகராட்சி, மின்சார வாரியம் ஆகியவை சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.