5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Madurai Rains: தத்தளிக்கும் மதுரை… 70 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த மழை!

மதுரை கனமழை: மதுரை மாநகரம் முழுவதும் அதி கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், வீடுகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்ககை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் அதி கனமழை பெய்துள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Madurai Rains: தத்தளிக்கும் மதுரை… 70 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த மழை!
மதுரை மழை (picture credit: Twitter)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Oct 2024 22:43 PM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, இந்த மாத தொடக்கத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து கரையை கடந்ததால், மழை பெய்வதும் குறைந்தது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை, தேனி உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதில் மதுரையில் கடந்த 4 நாட்களாக காலை, இரவு மழை வெளுத்து வாங்கி வருகிறது.

70 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் கொட்டித்தீர்த்த மழை

அதிலும் இன்று மதுரை மாநகரம் முழுவதும் அதி கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், வீடுகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்ககை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் அதி கனமழை பெய்துள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 15 நிமிடத்தில் 4.5 செ.மீ அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. தெப்பக்குளம், அண்ணா நகர், தல்லாக்குளம், முல்லை நகர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.  இதனால் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளது.

மேலும், பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.  இதனால், போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  மழைநீர் வெளியேற்றவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read: இனி பொது இடத்தில் குப்பை கொட்டினால் மாட்டிப்பீங்க.. ஏஐ மூலம் மிரட்டும் சென்னை மாநகராட்சி!

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு:

மதுரையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர்கள் பி. மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

 


மழை குறித்து சு.வெங்கடேசன் எம்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5cm மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காலை 8.30-மாலை 5.30 இடைப்பட்ட 9மணி நேரத்தில் 9.8cm மழை பொழிந்துள்ளது. பாதிப்பின் தீவிரத்தைத் தணிக்க போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மதுரையில் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read: இரண்டு நாட்களுக்கு கனமழை அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் எச்சரிக்கை

தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், வரும் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Latest News