Rain Alert: தமிழகத்தில் மழை தொடரும்.. வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்!

சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதலே பரவலான மழை விட்டுவிட்டு பெய்தது. இதன் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள், பணிக்கு செல்பவர்கள் அவதியடைந்தனர்.

Rain Alert: தமிழகத்தில் மழை தொடரும்.. வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்!

கோப்பு புகைப்படம்

Published: 

12 Dec 2024 09:22 AM

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலான மழை பெய்த நிலையில் இன்றும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு வந்த கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது டிசம்பர் 10ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் இலங்கை கடற்கரை பகுதிகளில் கன மொழிக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய மாநிலங்களில் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதலே பரவலான மழை விட்டுவிட்டு பெய்தது. இதன் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள், பணிக்கு செல்பவர்கள், நடைபாதை வியாபாரிகள் என அனைவரும் வெகுவாக பாதிக்க பட்டனர். இப்படியான நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

Also Read: School Leave: தொடரும் கனமழை.. 20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கு தெரியுமா?

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கரூர், புதுக்கோட்டை, அரியலூர். மயிலாடுதுறை. ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி, காரைக்கால், திருவண்ணாமலை, தஞ்சாவூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்றும் மழை தொடரும்

இதனுடைய தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவாரூர், தஞ்சாவூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யப்படும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மணி வரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Supreme Court: தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சணை சட்டம்.. உச்சநீதிமன்றம் வருத்தம்!

அதே சமயம் அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு,சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் லேசான மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் வடமாவட்டங்கள் நல்ல மழைப்பொழிவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் 70 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்துள்ளது.இது 100 மில்லி மீட்டராக உயர வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் ஜான் சொன்ன தகவல்

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “மழைப்பொழிவு பட்டியலில் நாகை மற்றும் சென்னை முதலிடத்தில் உள்ளது. மன்னார் வளைகுடா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதால் மேகங்கள் உள்பக்கமாக நகர்ந்து வருகிறது. நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை கடந்து அரபிக்கடலுக்கு செல்லும்.சென்னையில் இன்று இரவு முதல் நல்ல மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு: Tamil Breaking News Live: கனமழை.. பள்ளிகள் விடுமுறை.. இன்றைய செய்திகள் உடனுக்குடன்!

ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் படைத்த டாப் 10 சாதனைகள்..!
இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!
பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!