Tamilnadu Weather Alert: சில்லென மாறிய சென்னை.. நகரின் அனேக பகுதிகளில் கொட்டும் மழை..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அப்படி போடு..! சென்னை பீச் முதல் காட்பாடி வரை வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்கம்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
A super hot day and complete weakening of monsoon winds the other side in Kerala. Ideal conditions for Red Thakkalis today for North Tamil Nadu including KTCC (Chennai)
Yesterday we got road wetting rains in the city. Today looks good for rains in the Chennai City (KTCC)
(1/2)— Tamil Nadu Weatherman (@praddy06) August 3, 2024
மேலும் இன்று இரவு காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தென் மேற்கு பருவ மழை கேரளாவில் மெல்ல மெல்ல வலுவிழந்துள்ளது. ஆனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் கனமழை இருகக்கூடும். இன்று மட்டுமல்லாமல் இனி தினசரி இந்த பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மாலை நேரம் முதல் நல்ல காற்றுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மடிப்பாக்க, மேடவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர், சின்னமலை, அடையாறு, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பூமியின் உஷ்ணம் தனிந்து சில்லென்ற வானிலை தோன்றுகிறது.