5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரூ.100 இருக்கா? நாள் முழுவதும் பயணம் செய்யலாம்.. சென்னை மெட்ரோவின் செம்ம ஆஃபர்!

Chennai Metro Rail: சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகளை கவரும் வகையில் புதிய சலுகைகையை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோவில் வார இறுதி நாட்களில் ரூ.100 கட்டணம் செலுத்தி பயண அட்டையை பெற்று நாள் முழுவதும் பயணம் செய்யலாம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ரூ.100 செலுத்தி வாரஇறுதிக்கான பயண அட்டையை பயணிகள் பெற்று பயணம் மேற்கொள்ளலாம்.

ரூ.100 இருக்கா? நாள் முழுவதும் பயணம் செய்யலாம்.. சென்னை மெட்ரோவின் செம்ம ஆஃபர்!
சென்னை மெட்ரோ ரயில்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 19 May 2024 08:39 AM

சென்னை மெட்ரோ ரயில்: சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது மெட்ரோ ரயில் சேவை. இதில், நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது வரை இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்போடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தம் வழியாக மற்றொரு வழித்தடம் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. அதில், டோக்கன், பயண அட்டை, க்யூஆர் கோர்டு, வாட்ஸ் அப், போன்பே, பேடிஎம் போன்றவை மூலம் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

Also Read : அரசியலில் விஜய்யுடன் கைகோக்கும் நாம் தமிழர்.? அண்ணன் – தம்பி உறவு என விளக்கம் சொன்ன சீமான்!

100 ரூபாய் டிக்கெட்:


இந்த நிலையில், சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகளை கவரும் வகையில் புதிய சலுகைகையை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோவில் வார இறுதி நாட்களில் ரூ.100 கட்டணம் செலுத்தி பயண அட்டையை பெற்று நாள் முழுவதும் பயணம் செய்யலாம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ரூ.100 செலுத்தி வாரஇறுதிக்கான பயண அட்டையை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டை பெற ரூ.150 செலுத்த வேண்டும். பயணம் முடிந்ததும் அட்டையை திருப்பிக் கொடுக்கும்போது ரூ.50 உங்களுக்கு திருப்பி கொடுக்கப்படும். நாள் முழுவதும் இந்த ரூ.100 பயண அட்டையை பயன்படுத்தி மெட்ரோவில் பயணம் மேற்கொள்ளலாம். இந்த புதிய வசதி பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Also Read : Tamil Nadu Weather : அடுத்த 3 மணி நேரம்… 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம்!

Latest News