5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Unique Village : மொஹரம் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்.. 300 ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரியம்!

Hindus Celebrated Muharram | தஞ்சாவூர் மாவட்டத்தில் காசவளநாடு புதூர் கிராம மக்கள் மொஹரம் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, கடந்த 10 நாட்களாக விரதம் இருந்த அந்த கிராம மக்கள், ஊரின் மையப்பகுதியான் செங்கரையில் உள்ள சாவடியில் அல்லாசாமி என்று அழைக்கப்படும் உள்ளங்கை உருவம் கொண்ட பொருளை, பந்தல் அமைத்து வழிபாடு செய்தனர். 

Unique Village : மொஹரம் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்.. 300 ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரியம்!
மொஹரம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 18 Jul 2024 16:19 PM

மொஹரம் பண்டிகை : தஞ்சாவூர் மாவட்டத்தில் காசவளநாடு புதூர் என்ற ஒரு சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இந்துக்களாகவே உள்ளனர். இருப்பினும் இந்த கிராமத்தில் மொஹரம் பண்டிக்கை கோலகலமாக கொண்டாடப்படுகிறது. மொஹரம் இஸ்லாமியர்களின் பண்டிகையாக இருந்தாலும் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்த மக்கள் ஆண்டு தோறும் வெகு சிறப்பாக மொஹரம் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று தமிழகம் முழுவது மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இந்த கிராம மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடினர்.

10 நாட்கள் விரம் இருந்து மொஹரம் கொண்டாடிய இந்துக்கள்

அதன்படி கடந்த 10 நாட்களாக விரதம் இருந்த அந்த கிராம மக்கள், ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் அல்லாசாமி என்று அழைக்கப்படும் உள்ளங்கை உருவம் கொண்ட பொருளை, பந்தல் அமைத்து வழிபாடு செய்தனர்.

மொஹரம் பண்டிகையில் அல்லா சாமி வீதி உலா

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இந்த கிராமத்தில் கடந்த ஜுலை 16 ஆம் தேதி இரவு, கிராம மக்கள் அல்லா சாமிக்கு மாலை அணிவித்து வீதி உலா எடுத்துச் சென்றனர். அப்போது கிராம மக்கள் தங்கள் வீடுகளில் அவல், தேங்காய் மற்றும் பழங்களை வைத்து வீதி உலா சென்ற சாமியை வரவேற்றனர். அதுமட்டுமன்றி ஒவ்வொரு வீட்டிலும் சாமிக்கு எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டு அணிவித்து வழிபாடு நடத்தினர்.

இதையும் படிங்க : Tamil Nadu Day : ‘தமிழ்நாடு’ என பெயர் வந்தது இப்படித்தான்.. தமிழ்நாடு நாள் வரலாறு தெரியுமா?

தீ குண்டத்தில் இறங்கி வழிபாடு செய்த கிராம மக்கள்

பின்னர் ஜூலை 17 ஆம் தேதி மொஹரம் பண்டிகை அன்று அதிகாலை மீண்டும் செங்கரையில் சாவடிக்கு அல்லா சாமியை தூக்கி சென்று தீ குண்டலத்தில் இறங்கி வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து விரதம் இருந்த பொருதுமக்களும் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.

இதையும் படிங்க : Nilgiris Rain : 40செமீ வரை கனமழை.. வெள்ளக்காடான நீலகிரி.. வீடுகளில் புகுந்த மழை நீர்!

300 ஆண்டு பாரம்பரியத்தை காப்பாற்றும் கிராம மக்கள்

இந்த கிராம மக்கள் தங்கள் முன்னோர்களின் வழிகாட்டுதல் படி, கடந்த 300 ஆண்டுகளாக 10 நாட்கள் விரதம் இருந்து மொஹரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சாதி, மத கலவரங்களுக்கு மத்தியில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்த கிராம மக்கள் 300 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் இந்த பாரம்பரியம் மக்களிடம் வியப்பை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Latest News