5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Coimbatore: ஓனரே இப்படி செய்யலாமா? – வாடகைக்கு குடியிருந்தவர் வீட்டில் கைவரிசை!

Jewel Theft: மீண்டும் ஒரு நாள் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டிற்கு ஸ்ரீஹரி சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அன்றைய தினம் வீட்டின் மேஜை மீது வைத்திருந்த 14 கிராம் தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். 

Coimbatore: ஓனரே இப்படி செய்யலாமா? – வாடகைக்கு குடியிருந்தவர் வீட்டில் கைவரிசை!
கோவையில் நகை திருட்டு
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Dec 2024 19:57 PM

கோவை மாவட்டத்தில் வாடகைக்கு குடியிருந்தவரின் நகைகளை திருடிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி பகுதியில் குமரன் நகர் என்ற இடம் உள்ளது. இங்கு கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இவரின் வீட்டின் மேல் மாடியில் ஸ்ரீஹரி என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள பிரபல தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் ஒர்க் ப்ரம் ஹோம் முறையில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் கடந்த மாதம் ஸ்ரீஹரி வெளியூரில் உள்ள தனது பெற்றோரை பார்க்க மனைவியுடன் சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த இரண்டு சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரும் மனைவியும் வேறு எங்காவது நகையை மறந்து போய் வைத்து விட்டு தேடுகிறோமா என குழம்பி போயுள்ளனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு நாள் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டிற்கு ஸ்ரீஹரி சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அன்றைய தினம் வீட்டின் மேஜை மீது வைத்திருந்த 14 கிராம் தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Also Read: Vijay Sethupathi: பிக்பாஸால் வந்த வினை.. நடிகர் விஜய் சேதுபதி மீது போலீசில் புகார்!

மேலும் வீடு பூட்டியிருக்கும்போது மீண்டும் மீண்டும் எப்படி நகை திருடு போகியிருக்க கூடும்? கண்டிப்பாக இது யாரோ தெரிந்தவர்களின் கைவரிசை தான் என ஸ்ரீஹரிக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் ஸ்ரீஹரியும் அவரது மனைவியும் வீட்டில் நகைகள் திருடு போவதை கண்டுபிடிக்க ரகசியமாக திட்டமிட்டார்கள்.  அதன் பேரில் வீட்டில் ரகசிய சிசிடிவி கேமராவை பொருத்தியிருந்தனர். இதன்  மூலம் கண்டிப்பாக யார் தான்பூட்டிய வீட்டுக்குள் வந்து திருடுவது என்பது தெரியும் என்பதால் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.

அப்படியாக தங்கள் வீட்டில் திருடும் நபரை கண்டறியும் வகையில் வீட்டிற்குள் 13 கிராம் பிரேஸ்லெட், 6 கிராம் மோதிரம் ஆகியவை வைத்திருந்தனர். பின்னர் வழக்கம் போல் பெற்றோர் வீட்டிற்கு செல்வது போல் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வெளியே சென்று விட்டனர். சில மணி நேரம் கழித்து அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் வைத்துவிட்டு சென்ற நகைகளை காணாமல் போயுள்ளது.  இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.

Also Read: Viral: ரூ.4க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி.. சாலையை மறித்த பொதுமக்கள்!

அப்போது ஸ்ரீஹரி வீட்டை பூட்டி விட்டு சென்ற பிறகு வீட்டின் உரிமையாளரான கிருஷ்ணன் தன்னிடம் இருந்து மற்றொரு சாவியை பயன்படுத்தி வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்து அங்கிருந்து நகையை திருடி செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது. இந்தக் காட்சியை அப்படியே கொண்டு போய் கையோடு ஸ்ரீஹரி போலீசில் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் உரிமையாளர் கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கணபதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News