ஆன்லைனில் கட்டட அனுமதி பெற எந்தெந்த மாவட்டத்திற்கு எவ்வளவு? முழு விவரம்! - Tamil News | how much fee for any chennai and other cities to get building permission on online | TV9 Tamil

ஆன்லைனில் கட்டட அனுமதி பெற எந்தெந்த மாவட்டத்திற்கு எவ்வளவு? முழு விவரம்!

Published: 

24 Jul 2024 19:33 PM

தமிழ்நாட்டில் வீடு கட்ட ஆன்லைகள் மூலம் உடனடியாக அனுமதி பெறும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் வீடு கட்டுவதற்கான அனுமதியை அலுவலகம் சென்று பெற தேவையில்லை. ஆன்லைனிலேயே அதற்கான அனுமதி பெற முடியும். இந்த நிலையில், குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று மூலம் கட்டிட அனுமதி பெறுவதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆன்லைனில் கட்டட அனுமதி பெற எந்தெந்த மாவட்டத்திற்கு எவ்வளவு? முழு விவரம்!

தமிழக அரசு

Follow Us On

கட்டட அனுமதி:  தமிழ்நாட்டில் வீடு கட்ட ஆன்லைகள் மூலம் உடனடியாக அனுமதி பெறும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் வீடு கட்டுவதற்கான அனுமதியை அலுவலகம் சென்று பெற தேவையில்லை. ஆன்லைனிலேயே அதற்கான அனுமதி பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் 2,500 சதுர அடி வரையுள்ள மனையிடத்தில், 3,500 பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்பு கட்டடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை எளிதாகவும் உடனடியாகவும் பெற முடியும். இந்த நிலையில், குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று மூலம் கட்டிட அனுமதி பெறுவதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பொறுத்தவரை 3500 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டுமான அனுமதிக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.100, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1076 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Also Read: அடுத்த 6 நாட்களுக்கு பொளக்க போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

கட்டண விவரம்:

மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் 3 சிறப்பு நிலை ஏ மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.88, சதுரமீட்டருக்கு ரூ.900, 3 சிறப்பு நிலை பி மாநகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.84, சதுர மீட்டருக்கு ரூ.950, தேர்வு நிலை மாநகராட்சிகள் 5ல் சதுரடிக்கு ரூ.79, சதுர மீட்டருக்கு ரூ.850ம் , நிலை 1 மற்றும் 2 என்ற வகையில் 9 மாநகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.74, சதுர மீட்டருக்கு ரூ.800ம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சிகளில் 45 சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.74, சதுர மீட்டருக்கு ரூ.800ம், நிலை 1, நிலை 2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.70, சதுர மீட்டருக்கு ரூ.750ம் கட்டணமாக செலுத்த வேண்டும். பேரூராட்சிகளை பொறுத்தவரை 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.70, சதுர மீட்டருக்கு ரூ.750ம், தேர்வு நிலை பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.65, சதுர மீட்டருக்கு ரூ.700ம், 190 நிலை 1 பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.55, சதுர மீட்டருக்கு ரூ.590ம், நிலை 2 பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.45 மற்றும் சதுரமீட்டருக்கு ரூ.485ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

உள்ளாட்சிகளை பொறுத்தவரை சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.27 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.290, இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.25, சதுர மீட்டருக்கு ரூ.269, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூ.22 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.162 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் சுயசான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுககு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version