5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Trichy Airport: இரண்டு மணிநேரம் திக்.. திக்.. விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? திருச்சி ஏர்போர்டில் என்ன நடந்தது?

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வானிலை வட்டமடித்து இருந்தது. இதன் பிறகு சரியாக இரவு 8.15 மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. மேலும், அதில் பயணித்த 144 பேரும் பத்திரமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Trichy Airport: இரண்டு மணிநேரம் திக்.. திக்.. விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி?  திருச்சி ஏர்போர்டில் என்ன நடந்தது?
ஏர் இந்தியா விமானம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Oct 2024 22:15 PM

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வானில் சுமார் 2 மணி நேரத்திற்கு வட்டமடித்து வந்த நிலையில், தற்போது 8.15 மணிக்கு பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. மேலும், 144 பயணிகளும் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ஏன் விமானம் இரண்டு மணி வட்டமடித்தது? எப்படி பத்திரமாக தரையிறங்கியது போன்ற விவரங்களை பார்ப்போம். திருச்சி விமான நிலையித்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 விமானம் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானத்தில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இரண்டு மணிநேரம் திக்.. திக்

இதனால் விமானம் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்தது. ஏனென்றால் லேண்டிங் செய்யப்படும் கியரில் தான் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனால் விமானங்களின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை.

ஹைட்ராலிக்  சிஸ்டம் பிரச்னையும் ஏற்பட்டதால் சக்கரம் உள்ளே செல்லாமல் விமானம் பறந்துள்ளது. இதனை அறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

Also Read: சரக்கு ரயில் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்.. தடம் புரண்ட பெட்டிகள்.. திருவள்ளூரில் பரபரப்பு!

தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், போலீசாருக்கு குவிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் திருச்சி விமான நிலையத்தில் உள்ளன. ஆனால் விமானம் தரையிறங்குவதில் தான் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி?

விமானத்தில் எரிபொருள் நிறைவாக இருக்கும்போது உடனடியாக தரையிறக்கினால் அசம்பாவிதம் ஏற்படலாம். இதனால், எரிபொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரையிறக்க விமான திட்டமிட்டார். இதனால், சுமார் இரண்டரை மணி நேரமாக விமானம் வானில் வட்டமடித்தது. புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட எல்லை பகுதிகளில் விமானம் வட்டமடித்து கொண்டிருந்தது.

அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 21 முறைக்கு மேலாக வட்டமடித்ததாக தெரிகிறது.  மேலும், பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்காணமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விமானம் வட்டமடித்துள்ளது.  விமானம் தரையிறங்கும் விமானத்தில் அதிகளவில் எரிபொருள் இருக்கக் கூடாது. இதனால் விமான ஏரிபொருளை தீர்க்க வானில் விமானத்தை வட்டமடித்தார்.


சுமார் இரண்டரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம், எமர்ஜென்சி முறையில் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.   சுமார் 8.15 மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.  விமானத்தின் அடிப்பகுதியை தரையில் உரசி பெல்லி லேண்டிங் என்ற முறையில் விமானம் தரை இறக்கப்பட்டது.

விமானி சாதுரயமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறங்கப்பட்ட நிலையில், பின் பகுதியில் லேசாக புகை மட்டும் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதில் இருந்த பயணிகளும் பத்திரமாக உள்ளனர்.

ஏர் இந்தியா கூறுவது என்ன?

இதுகுறித்து ஏர் இந்தியா விமானம் கூறுகையில், “திருச்சிராப்பள்ளி – ஷார்ஜா வழித்தடத்தில் இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொடர்பான ஊடக அறிக்கைகளை நாங்கள் அறிவோம். இயக்கக் குழுவினரால் அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தொழில்நுட்பக் கோளாறு குறித்து புகாரளித்த பிறகு, பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டாம். விமானம் தரையிறங்குவதற்கு முன், ஓடுபாதையின் நீளத்தைக் கருத்தில் கொண்டும் எரிபொருளையும் எடையையும் குறைக்க  முடிவு செய்யப்பட்டது. இதனால்,  விமானம் பலமுறை  வானில் வட்டமிட்டது.

Also Read: விமானம் பத்திரமாக தரையிறங்கியது.. வானில் இரண்டரை மணி நேரம் வட்டமடித்தது ஏன்?

விமானத்தில் பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து முறையாக விசாரிக்கப்படும். இதற்கிடையில், எங்கள் பயணிகள் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதுர்யமாக செயல்பட்டு 144 பயணிகள் உயிரை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. விமானத்தை இயக்கியது இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த இக்ரோம், சக விமானி மைதில் ஆவார்.

Latest News